கழகத் தோழர்கள் எழுச்சியுடன் எடுத்த பெரியார் விழா
பெரியார் 138ஆவது பிறந்த நாளை செப்.17 அன்று தமிழகம் முழுதும் கழகத்தினர் எழுச்சியுடன் கொண்டாடினர்.
சேலத்தில் : சேலம் மாவட்டம், காவலாண்டியூரில் 17.9.16 அன்று தந்தை பெரியார் 138வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு கழகக் கொடியேற்று விழா, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கும் நிகழ்வு காலை 9.00 மணிக்கு நடைபெற்றது.
இந்நிகழ்வில் காவலாண்டியூர் கிளை கழகத் தலைவர் மாரியப்பன் தலைமையில் தோழர்கள் ஊர்வலமாக சென்று கழகக் கொடியை ஏற்றி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.
காவலாண்டியூர் சுந்தரம், செ.செ.காட்டுவளவு சின்ராசு, கண்ணாமூச்சி மாரியப்பன், மூலக்கடை இராசேந்திரன், காந்தி நகர் சரசுவதி ஆகியோர் கழகக் கொடியை ஏற்றினர். ஊர்வலத்தில் தோழர்கள் விஜயகுமார், சித்துசாமி, மாரியப்பன், பழனிசாமி, சின்ராசு, அபிமன்யூ, இராசேந்திரன், சந்திரன், அவினாசி, பழனிசாமி, தங்கராஜ், சேகர், பச்சியப்பன், சுந்தரம், சித்தன், பிரகாஷ், ராணி,
சரசுவதி ஆகியோர் இருசக்கர வாகனத்தில் ஊர்வலமாக சென்றனர். மூலக்கடை இராசேந்திரன் அனைவருக்கும் தேநீர் வழங்கினார்.
கொளத்தூரில் : தந்தை பெரியார் 138வது பிறந்தநாள் விழா சேலம் மாவட்டம் கொளத்தூர் ஒன்றிய பகுதிகளில் சேலம் மேற்கு மாவட்டத் தலைவர் கு.சூரியகுமார் தலைமையில் கழகக் கொடியேற்றி பொது மக்களுக்கு இனிப்பு வழங்கி சிறப்பாக கொண்டாடப்பட்டது. கொளத்தூர் சோதனைச்சாவடியில் கோவிந்தராசு, பேருந்து நிலையத்தில் ஆட்டோ செல்வம், வடக்கு ராஜா வீதி ஓவியர் மூர்த்தி, திருவள்ளுவர் நகரில் காயத்திரி சீமா, உக்கம்பருத்திக் காட்டில் இலக்கம்பட்டி சக்தி, தார்காடு விஜயகுமார், இலக்கம்பட்டியில் பெரியசாமி, நீதிபுரம் டைகர் பாலன் ஆகியோர் கழகக் கொடியை ஏற்றினர். தோழர்களுக்கு மதிய உணவு தார்காடு தர்மலிங்கம் இல்லத்தில் சிக்கன் பிரியாணி வழங்கப்பட்டது. ஊர்வலத்தில் 20 இரு சக்கர வாகனங்களில் 35 தோழர்கள் கலந்து கொண்டனர்.
ஈரோட்டில் : காலை 9 மணிக்கு ஈரோடு பன்னீர்செல்வம் பூங்காவிலுள்ள தந்தை பெரியாரின் முழு உருவச் சிலை முன் திரண்ட தோழர்கள், கழகக் கொடிக் கம்பத்தில் பிரபாகரன் கொடியேற்றினார். அய்யாவின் சிலைக்கு மாவட்டத்தலைவர் செல்லப்பன் மாலை அணிவித்தார். அங்கிருந்து தோழர்கள் ஊர்வலமாக தந்தை பெரியாரின் நினைவு இல்லத்திற்கு சென்றனர்.
அங்குள்ள அய்யாவின் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. பின்னர் தோழர்கள் இருசக்கர வாகனங்களில் ஊர்வலமாகச் சென்று பல்வேறு இடங்களில் கொடி யேற்றினர். அரங்கம்பாளையம், சூரம்பட்டி வலசு, சத்யா நகர், பெருமாள்மலை, சி.எம் நகர், மரவபாளையம், கொங்கம்பாளையம், சித்தோடு, சாணார்பாளையம் ஆகிய இடங்களில் கொடியேற்றப்பட்டு, தந்தை
பெரியாரின் கொள்கை முழக்கம் இடப்பட்டது. இறுதியாக, சித்தோடு அருகிலுள்ள பெரியார் நினைவு சமத்துவபுரத்தில் உள்ள அய்யா சிலைக்கு மாலை அணிவித்து பள்ளிக் குழந்தைகளுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.
நிகழ்வில் கலந்து கொண்ட தோழர்கள்: இரத்தினசாமி, ஆசிரியர் சிவக்குமார், சண்முகப்பிரியன், ப.குமார், சிவானந்தம், மோகன்ராஜ், ஜெயவனிதா, மணிமேகலை, கலைச்செல்வி, மகேஸ்பெரியார் பிஞ்சு.பிரபாகரன், பெரியார் பிஞ்சு முகுந்தன், திருமுருகன், மூத்த பெரியார் தொண்டர் இனியன் பத்மநாபன், எழிலன், பிரபாகரன், சத்தியராசு, பிரபு, சேலம் அன்பரசு, இசைக் கதிர், விஜி, ராசண்ணா, செளந்தர், செல்வம், நடராஜ், முருகேஷ், இனியவன், கமலக்கண்ணன், வேல்மாறன், முஸ்தபா, குமார். இருசக்கர வாகனப்பேரணியில் கலந்து கொண்ட தோழர்களுக்கு மரவபாளையம் குமார் மதிய உணவு வழங்கினார். கமலக்கண்ணன் மாலையில் தனது இல்லத்தில் தேநீர் வழங்கினார்.
திருச்செங்கோட்டில் : நாமக்கல் மாவட்ட அமைப்பாளர் மா. வைரவேல் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், நகரின் இரு பகுதிகளில் கழகத் தோழர்கள் வை. தனலட்சுமி, ச. ராஜலட்சுமி ஆகியோர் கழகக் கொடியேற்றினர். பின்பு பேருந்து நிலையம் அருகே உள்ள தந்தை பெரியாரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. இந்நிகழ்வில் கழகத் தோழர்கள், ஆதரவாளர்கள் பங்கேற்றனர்.
பள்ளிபாளையத்தில் : குமாரபாளையம் திராவிடர் விடுதலைக்கழகத்தின் சார்பில் தந்தை பெரியார் 138 பிறந்தநாள் விழாவை முன்னிட்டு நகரம் முழுவதும் இருசக்கர வாகன பேரணி காவேரிநகரில்தொடங்கி கத்தேரி சமத்துவபுரத்திலுள்ள தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பேரணி நிறைவு பெற்றது, மற்றும் நகரம் முழுவதும் கழகக் கொடியேற்றுதல் நிகழ்வு நடைபெற்றது. பேரணி தலைமை மு. சாமிநாதன் மாவட்ட தலைவர் பேரணியை துவக்கி வைத்தார். ரேணுகா திராவிடமணி மகளிரணிபொறுப்பாளர், இவ்விழாவில் மாவட்ட பொறுப்பாளர்கள் மற்றும் நகர பொறுப்பாளர்கள் அனைவரும் கலந்து கொண்டார்கள். நாமக்கல் மாவட்டச் செயலாளர் மு.சரவணன் தலைமையில்,பேருந்து நிலையம் அருகே வைக்கப்பட்ட பெரியாரின் உருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. இந்நிகழ்வில் மாவட்டப் பொருளாளர் முத்துப்பாண்டி உள்ளிட்ட கழகத் தோழர்கள் பலர் பங்கேற்றனர். 23.09.2016 வெள்ளிக்கிழமை குமாரபாளையத்தில் நடைபெறவுள்ள தந்தை பெரியார் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி பங்கேற்று சிறப்புரை ஆற்றவுள்ளார். இப்பொதுக்கூட்டத்தை சிறப்பாக நடத்துவதென்று முடிவு செய்யப்பட்டது.
இராசிபுரத்தில் : நகர அமைப்பாளர் பிடல் சேகுவேரா தலைமையில் இராசிபுரத்தில், கழக அலுவலகத்தில் வைக்கப்பட்ட பெரியாரின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.இந்நிகழ்வில் நகர வளர்ச்சி மன்றத் தலைவர் பாலு, ம.தி.மு.க. நகரச் செயலாளர் ஜோதிபாசு, விசிக நகர அமைப்பாளர் பூபதி மற்றும் தோழர்களும், ஆதரவாளர்களும் பங்கேற்றனர். கோபிசெட்டிப்பாளையத்தில் : ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப்பாளையத்தில் தந்தை பெரியார் 138 வது பிறந்தநாளை முன்னிட்டு தமிழர் கூட்டமைப்பின் சார்பாக அனைத்து முற்போக்கு அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சி களின் சார்பாக பேரணி நடைபெற்றது.பேரணி கோபி சீதா கல்யாண மண்டபத்தில் இருந்து துவங்கி பேருந்து நிலையம், கடைவீதி வழியாக அய்யா சிலைக்கு வந்தடைந்தது. அய்யா சிலைக்கு ஊர்வலத்தில் கலந்து கொண்ட பெண்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். ஊர்வலத்தில. கலந்து கொண்ட அனைவரும் பெரியாரியல் உறுதிமொழி எடுத்துக் கொண்ட பின் அய்யாவுடைய கருத்துக்களை வலியுறுத்தி ஒவ்வொரு அமைப்பின் பொறுப்பாளர்களும் உரையாற்றிய பின் பொதுமக்கள் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது. இப்பேரணியில் திக, திவிக, தபெதிக, திமுக, மதிமுக, நாம் தமிழர், விடுதலை சிறுத்தைகள், தமிழர் தேசிய முன்னணி, காந்தி மன்றம், தமிழ் வட்டம் உள்ளிட்ட அமைப்புகளை சார்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட தோழர்கள் கலந்து கொண்டனர்
மார்த்தாண்டத்தில் : குமரி மாவட்ட கழகம் சார்பாக மார்த்தாண்டம் ம.தி.மு.க அலுவலகத்தில் வைத்து கழகத் தோழர். சூசையப்பா தலைமையில் பெரியார் பிறந்த நாள் விழா நடைப்பெற்றது. பொருளாளர் மஞ்சு குமார் வரவேற்புரையாற்றினார். செயலாளர் தமிழ்மதி ‘பெரியாரியல்’ பற்றி கருத்துரை யாற்றினார். பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி பெரியார் தொழிலாளர் கழகத் (பெ.தொ.க.) தலைவர் நீதி அரசர் நன்றி கூறி முடித்தார்.
சென்னையில் : சென்னை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் 17.9.2016 அன்று கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் தலைமையில் 138ஆவது பெரியார் பிறந்த நாள் விழா எழுச்சியுடன் நடைபெற்றது. காலை 8.30 மணிக்கு இரு சக்கர வாகனங்களில் ஊர்வலமாக இராயப்பேட்டையில் இருந்து புறப்பட்டது. சென்னை அண்ணாசாலை தியாகராய நகர், ஆலந்தூர், மந்தைவெளியிலுள்ள பெரியார் சிலைகளுக்கு சாதிஒழிப்பு முழக்கத்துடன் மாலைகள் அணிவிக்கப்பட்டன. 11 மணிக்கு மந்தைவெளி செயின்ட் மேரிஸ் பாலத்தில் பெரியார் பிறந்த நாள் விழாவையொட்டி மயிலைப் பகுதி கழகத்தினர் கேக் வெட்டி கொண்டாடினர். 11.30 மணிக்கு இராயப்பேட்டை பகுதியில் பெயர்ப் பலகைகள் திறக்கப்பட்டன. சைவமுத்தையா 2ஆவது தெரு, மாவடி விநாயகர் கோவில் தெரு, அவ்வை சண்முகம் சாலை சந்திப்பு மற்றும் பெரியார் படிப்பகத்திலும், பாலாஜி நகரிலும், சிந்தனை பலகைகளை கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் திறந்து வைத்து சிந்தனைக் கருத்துகளை எழுதினார்.
1.00 மணியளவில் பெரியார் படிப்பகத்தில் இராயப்பேட்டை இளைஞரணி சார்பில் தோழர்கள் கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ந்தனர். அனைவருக்கும் மதிய உணவு அளிக்கப்பட்டது.
குடியாத்தம் இராமலை பகுதி கழகத் தோழர்கள் சிவா தலைமையில் தனி வாகனத்தில் பறை இசை குழுவினருடன் பங்கேற்றனர். பறை இசை முழங்க, சென்னை நகர வீதிகளில் வாகனப் பேரணி கழகக் கொடி முழக்கங்களுடன் அணி வகுத்து வந்த காட்சி பொது மக்களை மிகவும் ஈர்த்தது.
கழக விழாவில் குமரிஅனந்தன் பங்கேற்றார்
இராயப்பேட்டை பெரியார் படிப்பக வாயிலில் கழக இளஞரணி தோழர்கள் பெரியார் சிலைக்கு மாலை அணிவிக்க திரண்டிருந்தபோது, அவ்வழியே காரில் வந்த காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குமரி அனந்தன் காரை நிறுத்தி விழாவில் ஆர்வத்துடன் பங்கேற்றார். இராயப்பேட்டை பெரியார் படிப்பக வாயிலுள்ள பெரியார் சிலைக்கு முதுமையான வயதிலும் படியேறி மாலை அணிவித்தார். தோழர்கள் பெரியார் கொள்கை முழக்கங்களை எழுப்பினர். பிறகு தோழர்களிடம் விடைபெற்றுச் சென்றார்.
சென்னையில் நடந்த விழாவில் ஏராளமான இளைஞர்கள், பெண்கள் கழகத்தின் புதிய வரவுகளாக ஆர்வத்துடன் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.
பெரியார் முழக்கம் 22092016 இதழ்