வினாக்கள்… விடைகள்…!

‘வாஸ்து’ நம்பிக்கையால் டெல்லியில் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வீடுகளில் 70 எம்.பி.க்கள் குடியேறவில்லை – செய்திவிடாதீங்க… டெல்லிக்குப் போகும் விமானத்துலயும் வாஸ்துப்படி இருக்கை கேளுங்க! இல்லாவிடில் டில்லிக்கும் போகாதீங்க!

தில்லை நடராசன் கோபுரத்தை மறைத்து கட்டிடம் கட்டுகிறார்கள், தீட்சதர்கள். – செய்திகோபுரத்தை இடிச்சுட்டு ‘பிளாட்’ போட்டுக்கூட விப்பாங்க; அதுக்கெல்லாம் உச்சநீதிமன்றத்துல சு.சாமி அதிகாரம் வாங்கிக் கொடுத்திருக்காரு!

கோயில்களில் சூரிய மின்சக்தியை உற்பத்தி செய்வது ஆகமத்துக்கு எதிரானது. – இந்து அமைப்புகள் எதிர்ப்புசூரிய பகவானையும் ‘சூத்திரர்’ பட்டியலில் சேர்த்துட்டேளா?

திருப்பதி தேவஸ்தானம் நிர்வாக ரீதியாக எடுக்கும் முடிவுகளால் ‘புரோக்கர்’களுக்குத் தான் பயன். – ‘தினமலர்’ விடுங்கய்யா… ஏழுமலையான் புரோக்கர்களான அர்ச்சகர்கள் மட்டும்தான் காலம்காலமாய் பயனடைய வேண்டுமா என்ன?

அமைச்சர் செந்தில் பாலாஜி பதவி நீக்கம். – செய்திமண்சோறு உண்டார்; மண்ணில் உருண்டார்; ‘மந்திரி’யும் இழந்தார்!

கடவுள் பெயர்களை வணிக நிறுவனங்கள் வர்த்தகத்துக்குப் பயன்படுத்த தடை இல்லை. – டெல்லி உயர்நீதிமன்றம்வர்த்தகத்துக்குப் பயன்படுத்தலாம்; வர்த்தக மோசடிக்கும் பயன்படுத்தலாம்; கடவுள் வந்து கேட்கவா போறாரு!

பெரியார் முழக்கம் 30072015 இதழ்

You may also like...

Leave a Reply