பெரியார் சிலைகளை, சிலைகளுக்கு கீழே உள்ள வாசகங்களை மறைக்க கூடாது என கழகம் தொடர்ந்த வழக்கில் வெற்றி!
பெரியார் சிலைகளை, சிலைகளுக்கு கீழே உள்ள வாசகங்களை மறைக்க கூடாது என கழகம் தொடர்ந்த வழக்கில் வெற்றி!
தமிழ்நாடு முழுவதும் இருக்க கூடிய தந்தை பெரியார் சிலைகளை மட்டுமல்ல, சிலைகளுக்கு கீழே உள்ள வாசகங்களை (கடவுள் மறுப்பு உள்ளிட்ட) மறைக்க கூடாது என நீதி மன்றம் இன்று அதிரடி உத்தரவு !
திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் மாநில அமைப்புச் செயலாளர் தோழர் ஈரோடு இரத்தினசாமி அவர்கள் தொடர்ந்த வழக்கில் இன்று (11.03.2016) சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேசு மற்றும் விமலா ஆகியோர் கொண்ட அமர்வு இந்த உத்தரவை வழங்கியது.
மேலும் நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில்
கழகத்தின் சார்பில் தேர்தல் ஆணையத்திடம் திராவிடர் விடுதலைக் கழக கொடிக் கம்பங்களை அகற்றக்கூடாது என கொடுக்கப்பட்ட மனு மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டுள்ளனர்.
இந்த வழக்கில் கழகத்தின் சார்பாக வழக்கறிஞர்கள் தோழர் கான்சியஸ் இளங்கோ,தோழர் துரை அருண் ஆகியோர் வாதாடி இந்த தீர்ப்பினை பெற்றுள்ளனர்.
முன்னதாக
தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சி தலைவர்களின் சிலைகளை தேர்தல் ஆணைய உத்தரவின் பேரில் அரசு அதிகாரிகள் மறைத்து வருகிறார்கள். ஆனால் பெரியார் சிலைகளை மறைக்க கூடாது என உயர் நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.திராவிடர் கழகம் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர் நீதி மன்றம் 2011 ஆம் ஆண்டு இந்த உத்தரவை பிறப்பித்தது.
புரிதல் இல்லாமல் சில அரசு அதிகாரிகள் பெரியார் சிலைகளை மறைக்க முயற்சி செய்தால் அவர்களுக்கு காண்பித்து நீதிமன்ற உத்தரவுப்படி பெரியார் சிலைகளை மறைக்காமல் இருக்க இந்த நீதிமன்ற உத்தரவு நகலை தரவிரக்கம் செய்து தோழர்கள் பயன்படுத்திக் கொள்ளும் படி கேட்டுக் கொள்கிறோம்.