Category: சேலம் கிழக்கு

0

தாரமங்கலத்தில் ” உஷாரய்யா, உஷாரு .. “ என்னும் மூடநம்பிக்கைகளை அம்பலப்படுத்தும் குறுந்தகடு வெளியீடு

1-8-2015 சனிக்கிழமை மாலை 5-00 மணியளவில், சேலம் மாவட்டம், தாரமங்கலம் அங்காள பரமேஸ்வரி சமுதாயக் கூடத்தில், ” உஷாரய்யா, உஷாரு .. “ என்னும் மூடநம்பிக்கைகளை அம்பலப்படுத்தும் குறும்படத் திரையிடலும், குறுந்தகடு வெளியீடும் நடந்தது. தோழர் கோகுலக்கண்ணன் வரவேற்புரை ஆற்றினார். குறும்படத்தை திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி வெளியிட, தாரமங்கலம் பேரூராட்சியின் முன்னாள் தலைவர் சின்னாமி பெற்றுக் கொண்டார்.கழகத் தலைவர் கொளத்தூர் மணி, கவிஞர் அ. முத்துசாமி, மேட்டூர் முல்லைவேந்தன் மற்றும் பல்துறை சான்றோர் பாராட்டுரைக்குப் பின்னர், திரைப்பட இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார் பாராட்டுரை வழங்கினார். நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்களும், கழகத் தோழர்களும் கலந்துகொண்டனர்.

0

“பெரியாரியல் பேரொளி” தோழர் பட்டுக்கோட்டை சதாசிவம் ( வளவன் ) 75ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா

பெரியாரியல் கொள்கைகளை கிராமம் கிராமமாக சென்று பரப்பும் பணியை தொடர்ந்து பல ஆண்டுகளாக செய்துவருபவரும், ஏராளமான பெரியாரியல் பரப்புரையாளர்களை உருவாக்கியவருமான தோழர் பட்டுக்கோட்டை சதாசிவம் ( வளவன் ) அவர்களுக்கு 24-7-2015ஆம் நாள் 75ஆம் ஆண்டு பிறந்தநாள் ஆகும். பேச்சின்போக்கில் இதை அறிந்துகொண்ட மேட்டூர் நகரக் கழகத் தோழர்கள் அவருக்கு பிறந்தநாள் விழா எடுக்க முடிவுசெய்து கழகத் தலைமையிடம் அனுமதி கோரினர். கழகத் தலைவரும், கழகப் பொதுச்செயலாளரும் கலந்துபேசி அவரது நீண்ட கால பெரியாரியல் பரப்புரைப் பணிகளைக் கருத்தில் கொண்டு அவ்விழாவை நடத்த அனுமதித்ததோடு, அவருக்கு “ பெரியாரியல் பேரொளி ” என்ற விருதினை அளிக்கவும் ஆலோசனைக் கூறினர். அதையடுத்து 24-7-2015 வெள்ளியன்று மேட்டூர் மகலட்சுமி திருமண மண்டபத்தில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் அவ்விழாவை எடுத்தனர். அது விழா என்ற அளவோடு முடிந்துவிடாமல் அதை ஒரு பயிலரங்கமாகவும் நடத்தினர். கழகத் தலைவர் கொளத்தூர் மணி ‘ இட ஒதுக்கீட்டின்...