தலைமை அறிக்கை – யுவராஜை கைது செய்யாத காவல்துறையைக் கண்டித்து ஆக 17இல் ஆர்ப்பாட்டம்
“கோகுல்ராஜ் கொலையில் தேடப்படும் குற்றவாளி யுவராஜ் என்பவர், இதுவரை கைது செய்யப்படவில்லை. நடந்தது ஒரு சாதாரண கொலைதான், இதற்கு ஏன் காவல்துறை இப்படி பெரிதுபடுத்த வேண்டும் என்றும் காவல்துறையால் தன்னை நெருங்க முடியாது என்றும், தனது ஜாதிக்காரர்களிடம் ‘வாட்ஸ் அப்’ வழியாக யுவராஜ் பேசி, அந்த பேச்சு பரப்பப்பட்டு வருகிறது. இதேபோல் வேறு ஒரு கொலை வழக்காக இருந்தால் தலைமறைவான குற்றவாளியைப் பிடிக்க காவல்துறை அவரது குடும்பத்தினரைக் கைது செய்து குற்றவாளியை சரணடைய வைத்திருப் பார்கள். ஆனால், இந்த யுவராஜை கைது செய்வதில் காவல்துறை அலட்சியம் காட்டி வருகிறது. இதைக் கண்டித்து ஆகஸ்டு 17ஆம் தேதி ஒத்த கருத்துடைய அமைப்புகளை ஒருங்கிணைத்து, திருச்செங் கோட்டில் திராவிடர் விடுதலைக் கழகம் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்துள்ளது” என்று செய்தியாளர்களுக்கு நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி பேட்டியளித்தார். தொடர்ந்து மதுவிலக்கு பிரச்சினை குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, “முழுமையான மதுவிலக்கு...
