மணி: ஏன்டா சேஷா ! நம்ம தலைவர்களான ஸ்ரீமான்கள் சீனிவாசய்யங்கார், சத்தியமூர்த்தி , ரெங்கசாமி அய்யங்கார் , சீனிவாச சாஸ்திரி, சிவசாமி அய்யர், ஊ.ஞ. அய்யர் மற்றுமுள்ள பிராமணோத்தமர்கள் எல்லாம் இந்த எலக்ஷனில் எவ்வளவோ பாடுபட்டு மடாதிபதிகள் மகந்துகள் பணத்தை லட்சக்கணக்காக செலவு செய்து ஜெயித்து விட்டோம், ஜெயித்து விட்டோம் என்று தப்பட்டை அடித்தார்களே, கடைசியில் பார்க்கிறபோது பழையபடி மூன்று சூத்திரர்கள் தானே மந்திரிகளாய் விட்டார்கள். இதில் என்ன நமக்கு லாபம். ஸ்ரீமான்கள் சத்தியமூர்த்தி, ரெங்கசாமி அய்யங்கார். ஆ.மு ஆச்சாரியார், வெங்கிட்ட ரமணய்யங்கார் இவர்களெல்லாம் மந்திரிகளாய் வருவார்கள் என்றல்லவா நாம் எல்லோரும் எவ்வளவோ பாடுபட்டோம். கணக்கு, மணியக்காரர், காப்பிக் கடை, பஞ்சாங்கம், புரோகிதம், வக்கீல் குமாஸ்தா, வக்கீல், முனிசீப், ஜட்ஜ், நிர்வாக சபை எல்லாம் பாடுபட்டும் பழையபடி சூத்திர ராஜாங்கம்தானே ஆகிவிட்டது. சேஷன்: மணி! நீ என்ன பெரிய முட்டாளாயிருக்கிறாயே. நமக்கு எவ்வளவு பெரிய வெற்றி தெரியுமா? இந்தப் பணகால் ராஜாவை...