சைமன் ரிப்போர்ட்டு
சைமன் கமிஷன் ரிப்போர்ட்டு வெளியாகி விட்டது. இதன்பேரில் ஏதாவது ஒரு அபிப்பிராயம் தெரிவிக்காதவர்களை பொது ஜனங்கள் தலைவர்களாகவோ முக்கியமான மனிதர்களாகவோ கருதுவதில்லை. அன்றியும் தலைவர்களாகவோ முக்கியமான மனிதர்களாகவோ ஆக வேண்டும் என்கின்ற ஆசை இருப்பவர்களும் இந்த மாதிரி சந்தர்ப்பங்களில் அபிப்பிராயங்கள் சொல்லுவதன் மூலமே தங்கள் ஆசை நிறைவேறும் என்று கருதுவதும் சகஜம். இவை ஒரு புறம் நிற்கப் பொது காரியங்களில் உழன்று கொண்டு இருப்பவர்கள் யாராவது இம்மாதிரி விஷயங்களில் அபிப்பிராயம் சொல்லாவிட்டால் அவர்களை பயங்காளி என்று சொல்லுவதும் வழக்கம். சுவற்று மேல் பூனை போலிருந்து வாழ வேண்டுமென்கின்றவர்களான, தங்களுக்கென்று யாதொரு கொள்கையுமில்லாத சிலர் சற்று சங்கடமான நிலைமையில் யாதொரு அபிப்பிராயமும் சொல்லாமல் நழுவவிடுவதும் சகஜம். ஆனால் நம்மைப் பொறுத்த வரை நாம் எந்த காரணத்தைக் கொண்டா வது ஏதாவது சொல்லித்தீர வேண்டிய நிலைமையில் இருக்கின்றோம். அந்தப்படி இப்போது ஏதாவது ஒரு அபிப்பிராயம் சொல்லுவதில் சைமன் கமிஷனை உபயோகமற்றது என்று ஒரே வார்த்தை...
