Tagged: Cashless Economy

மோடி அறிவிப்பால் கறுப்புப் பணம் ஒழிந்து விடுமா? பேராசிரியர் ஜெயரஞ்சன்

சராசரியாக ஆண்டுக்கு ரூ.35 லட்சம் கோடி கள்ளப் பணம் பன்னாட்டு வர்த்தகம் வாயிலாக வெளியேறுகிறது கறுப்புப் பணம் உள்நாட்டில் முதலீடு செய்யப்படுவது மிகவும் சொற்பம். இதுகுறித்து ஆய்வு நடத்திய தேவ்கர் என்ற பொருளாதார வல்லுநர், 2010ஆம் ஆண்டு அவர் வெளியிட்ட ‘The Driver and Dynamics of Illicit Financial Flows’ என்ற நெடிய ஆய்வுக் கட்டுரையில், இந்திய நாட்டில் உருவாகும் கறுப்புப் பணத்தில் ஐந்தில் ஒரு பகுதி மட்டுமே உள்நாட்டு சொத்துகளில் முதலீடு செய்யப்படு வதாக நிறுவுகிறார். மீதமுள்ள கறுப்புப் பணம் அனைத்தும் வெளிநாடுகளில்தான் முதலீடு செய்யப்படு கிறது. இத்தகைய பணம் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்குத்தான் பெருமளவில் சென்றடைகின்றன என்பதையும் அவர் பொதுவெளியில் உள்ள புள்ளி விவரங்களைப் பயன்படுத்தி கண்டுபிடித்துள்ளார். இவ்வாறு வெளியேறும் பணத்தின் அளவின்படி பார்த்தால் இந்தியா, உலகிலேயே மூன்றாவது இடத்தில் உள்ளது. மிக முக்கியமாக, அவரது ஆய்வின் வாயிலாக நாம் நமது நாட்டிலிருந்து வெளிநாடுகளுக்கு எடுத்துச் செல்லப்பட்ட கள்ளப்...