7 தமிழர்களையும் நீண்டகால ஆயுள் சிறைவாசிகளையும் 161ஆவது விதியின் கீழ் விடுதலை செய்ய தமிழக முதல்வருக்கு வேண்டுகோள்
இராசீவ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று 24 ஆண்டுகளாக சிறையில் வாடும் 7 தமிழர்களை அரசியல் அமைப்புச் சட்டத்தின் 161ஆவது பிரிவின் கீழ் விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு அனைத்துக் கட்சி இயக்கங்களைச் சார்ந்த ‘தமிழர் எழுவர் விடுதலை கூட்டியக்கம்’ வேண்டுகோள் வைத்துள்ளது. 7 தமிழர்கள் மட்டுமல்லாது சிறையில் நீண்டகாலம் வாடும் அனைத்துக் கைதிகளையும் விடுதலை செய்ய வேண்டும் என்றும் கூட்டியக்கம் வலியுறுத்தியது. அண்மையில் வெளி வந்த உச்சநீதிமன்றத் தீர்ப்பு இந்தப் பிரிவை பயன்படுத்தும் மாநில அரசின் உரிமையை உறுதி செய்துள்ளது என்றும், கூட்டியக்கம் சுட்டிக்காட்டியுள்ளது. சென்னையில் ஜன.4ஆம் தேதி நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில், கூட்டியக்கம் சார்பில் தோழர்கள் வேல் முருகன், தியாகு செய்தியாளர்களிடம் முன் வைத்த அறிக்கை : இராசீவ் கொலை வழக்கில் 24 ஆண்டுகளாக சிறையில் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி, ராபர்ட் பய°, இரவிச்சந்திரன், ஜெயக் குமார் ஆகிய...