Tagged: ஹோமக் குண்டம்

ஹோமக் குண்ட புகை உடலுக்கு நல்லதா? நக்கீரன்

ஓர் ஆங்கில நாளிதழின் நிருபர் ஒருவர் தான் அழைத்திருந்தார். அவர் எடுத்த எடுப்பிலேயே, “ஹோமக் குண்டத்தில் வரும் புகை நல்லதா, கெட்டதா?” என்று கேட்டார்.  புகையில் ஏது நல்ல புகை, கெட்ட புகை? இக்கேள்விக்குப் பின்னால் ஒரு நிகழ்வு இருந்தது. அந்நிருபர் புகையின் தீமைகளைப் பற்றி எழுதி ஒரு கட்டுரையை அளித்திருக்கிறார். அக்கட்டுரையில் ஹோமத்தில் எழும் புகையும் தீமை தருவதுதான் என்று எழுதியிருக்கிறார். அவருடைய உயர் அதிகாரி அழைத்து அவ்வரியை நீக்க சொல்லியிருக்கிறார். காரணம் கேட்டபோது ஹோமத்தில் வரும் புகை புனிதமானது. ஒருவேளை அதில் தீமைகள் இருந்தாலும் மந்திரங்கள் உச்சரிக்கப்படும்போது அத்தீமைகள் விலகி அது புனிதமடைகிறது என ஒரு புதிய அறிவியல் விளக்கத்தை அவர் அளித்திருக்கிறார். புகை என்றுமே நுரையீரலுக்குப் பகை தான். அது சாம்பிராணி புகையாக இருந்தாலும் சரி, சல்பர் டை ஆக்சைடு கலந்த புகையாக இருந்தாலும் சரி. இதனால்தான் ஆலைகள் வெளியிடும் புகை, குப்பைகள் எரிக்கும் புகை உள்ளிட்ட...