Tagged: ஹிட்லர்

ஹிட்லர் – முசோலினியை ஆதரித்த-ஆர்.எஸ்.எஸ்.

தமிழ்நாடு மாணவர் கழக சார்பில் “யார் தேச விரோதிகள்” என்ற தலைப்பில் கருத்தரங்கம் சென்னையில் திராவிடர் விடுதலைக் கழக தலைமை அலுவலகத்தில் 5.2.2017 அன்று மாலை நடைபெற்றது. பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் ஆற்றிய உரையிலிருந்து. (சென்ற இதழ் தொடர்ச்சி) இந்தியாவில் சுதந்திரப் போராட்டம் நடந்த காலத்தில் இரண்டாவது உலக யுத்தமும் நடந்து கொண்டிருந்தது. அந்த காலகட்டங்களில் யூதர்களை இனப்படுகொலை செய்து, உலக வரலாற்றில் இன்று வரை வெறுக்கப்படும் இனப் படுகொலையாளர் ஹிட்லரை ஆதரித்ததுதான் ஆர்.எஸ்.எஸ். ஹிட்லரின் ஸ்வஸ்திக் கொடியை தங்கள் கொடியாக வைத் திருந்தார்கள்; முதல் உலகப் போர் நடந்தபோது இந்தியாவில் ஆயுதம் தாங்கிய உள்நாட்டுப் புரட்சியை நடத்தி இந்தியாவை ‘இந்து இராஜ்யமாக்க’த் திட்ட மிட்டார்கள். அப்போது ஆர்.எஸ்.எஸ். தலைவராக இருந்த ஹெட்கேவர் என்ற ‘சித்பவன்’ பார்ப்பனர், தங்களது குருவான திலகரிடம் இந்த யோசனையை முன் வைத்தபோது, திலகர் அது  நடைமுறையில் தோல்வியைத் தழுவி விடும் எனக் கூறிவிட்டார். ஹிட்லரின்...