Tagged: ஷாகா

தேசியக் கொடிக்குள் பதுங்கியிருக்கிறதா தேசபக்தி?

தேசியக் கொடிக்குள் பதுங்கியிருக்கிறதா தேசபக்தி?

பார்ப்பனக் கொழுப்புடன் பேசி வரும் பா.ஜ.க. எச். ராஜா, தொலைக்காட்சி நேர்காணல் நிகழ்ச்சி ஒன்றில் வழக்கமான திமிரோடு பேசினார். தன்னை ஓர் ஆர்.எஸ்.எஸ்.காரர் என்றும், தேசியக் கொடியை அவமதிப்பவர்கள் எவராக இருந்தாலும் அதை இந்த  தேசத்தில் அனுமதிக்க மாட்டோம் என்றும் ‘ஹிட்லர்’ குரலில் மிரட்டினார். ‘இவாள்’களின் தேச பக்தி,  தேசியக் கொடி எனும் துணிக்குள்தான் பதுங்கிக் கிடக்கிறது. மற்றபடி தேசத்தின் ‘இறையாண்மை’யை சர்வதேச நிதி மூல தனத்திடமும், பன்னாட்டு சுரண்டல் நிறுவனங்களிட மும் தாராளமாக அடகு வைப்பார்கள். ‘தேசியக் கொடி’யின் கீழே அமர்ந்து கொண்டு இதற்கான அடிமைப் பத்திரத்தை எழுதிக் கொடுப்பார்கள். அந்த அடிமைப் பத்திரத்துக்கு இரு நாடுகளுக்கிடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் என்று பெயர் சூட்டிக் கொள்வார்கள். ‘அனைத்தும் நாட்டின் வளர்ச்சிக்கே’ என்று தேசபக்தியோடு கூறிக் கொள்வார்கள். ரவிசங்கர் என்ற ஆன்மீகப் பார்ப்பன வியாபாரி, யமுனை ஆற்றுப் படுகையில் சுற்றுச் சூழல் விதிகளுக்கு எதிராக ‘உலக கலாச்சார விழா’ என்று பல...