நவீன மருத்துவமும் வைதீகச் சடங்குகளும்!
சென்னை அரசு தலைமைச் செயலகத்தில் இந்த ஆண்டு ஆயுத பூஜை கொண்டாட்டங்கள் நிறுத்தப்பட்டு விட்டன என்று ஊழியர் சங்கங்கள் அறிவித்துள்ளன. இதற்கு கூறப்பட்டள்ள காரணம் முதலமைச்சர் உடல்நலம் குன்றியிருக்கும் சூழலில் கொண்டாட்டங்கள் கூடாது என்பதாகும். இந்த ‘சூழலில்’ மட்டுமல்ல; எப்போதுமே அரசு அலுவலகங்களில் மத கொண்டாட்டங்கள் நடக்கக் கூடாது. காரணம், அனைத்து மதத்தினரும் பணியாற்றக் கூடிய அலுவலகங்களில் ஒரு குறிப்பிட்ட மதத்துக்கு மட்டும் தனி உரிமைகள் இருக்கக் கூடாது. ‘பூஜை’கள் என்பது பக்திக்காக நடப்பவை அல்ல; அது ‘கொண்டாட்டம்’ என்ற உண்மையை அரசு ஊழியர்கள் ஒப்புக் கொள்கிறார்கள். அதனால்தான் முதல்வர் உடல்நலமின்றி இருக்கும்போது கொண்டாட்டம் கூடாது என்கிறார்கள். மற்றொரு பக்கத்தில் முதல்வர் நலம் பெற வேண்டும் என்று பூஜைகள், யாகங்களை அக்கட்சியின் அமைச்சர்கள், பொறுப்பாளர்கள் நடத்துகிறார்கள். தர்மபுரி மாவட்டத்தில் தமிழக அமைச்சர் ஒருவர் யாகம் நடத்தும்போது அந்த புகையினால் மயக்கமடைந்தார் என்று செய்தி வந்திருக்கிறது. தரையில் சோறு சாப்பிடுகிறார்கள். இது உடல்...