Tagged: வேதங்களின் நாடு

பொருள் தெரியாத உளறல்!

பொருள் தெரியாத உளறல்!

மறைந்த கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களில் ஒருவரான ஈ.எம்.எஸ். நம்பூதிரிபாத்  அர்த்தம் புரியாமல் வேதம் படித்த தனது அனுபவத்தை இவ்வாறு கூறுகிறார்: ஒன்பதாவது வயது முதல் ஆறாண்டு காலம் ரிக் வேதம் முழுவதையும் மனப் பாடமாகப் பயிலுவதற்காக நான் செல வழித்தேன். குடும்பப் பாரம்பரியத்தோடு ஒட்டிய ஒரு ஏற்பாடு இது. அறுபது ஆண்டு களுக்கு முன்னால் அது நடை பெற்றது. நம்பூதிரிகள் ரிக்வேதிகள், யஜுர் வேதிகள், சாமவேதிகள் என்று பிரிக்கப்பட் டுள்ளனர். அந்தந்தப் பிரிவைச் சேர்ந்த ஆண் பிள்ளைகள் இளமையில் ஒரு முறையாவது அவர்களுக்குரிய வேதங்களை குருவிடமிருந்து நேரடியாகக் கேட்பதும் சுயமாகப் பாராயணம் செய்வதும் கட்டாய மாகும். அவர்களில் ஒரு பிரிவினராவது அவரவர் வேதங்கள் முழுவதையும் பாகம் பாகமாக திரும்பத் திரும்ப பாராயணம் செய்து மனப்பாடம் செய்து கொண்டனர். அவர்களில் நானும் ஒருவன். ஆனால் மனப்பாடமாகப் பயிலுவதைத் தவிர நாங்கள் உச்சரிப்பதன் பொருள் என்ன என்று இந்தச் சிறுவர்களோ அவர்களின் குருமார்களோ அறிந்திருக்க...