Tagged: வெகு மக்கள் உரிமை மீட்போம்

சேலம் மாநாட்டு களத்திலிருந்து…

திராவிடர் விடுதலைக் கழகம் இதுவரை நடத்திய மாநாடுகளி லிருந்து தனித்துவம் பெற்ற மாநாடாக வேதமரபு மறுப்பு மாநாடு இருந்தது. மாநாட்டு அரங்குகளில் வேத மரபை மறுத்த கபிலர், திருமூலர், வள்ளார் கருத்துகளும், நூற்றாண்டு காணும் எழுத்தாளர் விந்தன் எழுதிய ‘பெரியார் அறிவுச்சுவடி’யில் இடம் பெற்ற வாசகங்களும் பதாகைகளில் எழுதப்பட்டிருந்தன. இவர் களுடன் பெரியார், அம்பேத்கர், புரட்சிக் கவிஞர் கருத்துகளும் வைக்கப்பட்டிருந்தன. காலை அமர்வு நடந்த அரங்கிற்கு கபிலர், திருமூலர் அரங்கு என்றும், மாலை நடந்த திறந்தவெளி மாநாட்டு அரங்கிற்கு தவத்திரு குன்றக்குடி அடிகளார் அரங்கு என்றும் பெயர் சூட்டப்பட் டிருந்தது. இறை நம்பிக்கைக் கொண்ட வேத மரபுகளை எதிர்த்த பார்ப்பன எதிர்ப்பாளர்களின் பெயர்களும் படங்களும் கடவுள் மறுப்பு தத்துவத்தை ஏற்றுக் கொண்ட பெரியார் இயக்கத்தின் மாநாட்டு மேடைகளுக்கு சூட்டப் பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. பெரியாரின் கடவுள் மறுப்பு தத்துவத்தின் நோக்கம், ஒடுக்கப் பட்ட மக்கள் மீதான இழிவு ஒழிப்பு மற்றும் சமூக உரிமை...