Tagged: வீரப்பன்

‘வீரப்பன் வழக்கு’ குறித்த ஒரு பார்வை !

‘கன்னட நடிகர் ராஜ்குமார் மீட்பு’ கன்னட நடிகர் ராஜ்குமாரை வீரப்பன் 2000 ஆம் ஆண்டு காட்டுக்குள் கடத்தி சென்று வைத்திருந்தார். அப்போது ராஜ்குமாரை மீட்க ‘தமிழக அரசின் தூதுவர்களாக’ அந்த ஆண்டு நவம்பர் மாதம் கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி, அய்யா பழ.நெடுமாறன், பேரா.கல்யாணி முதலியோர் காட்டுக்குள் சென்று ராஜ்குமார் குழுவினரைப் பத்திரமாக மீட்டு வந்தனர். ‘அமைப்பு தொடக்கம்,பத்திரிக்கையாளர் சந்திப்பு’ நடிகர் ராஜ்குமார் மீட்புக்கு செல்லவேண்டாம் என்ற தனது அறிவுரையை மீறி சென்றதால், திராவிடர்க் கழகப் பொதுச்செயலாளர் வீரமணி, கொளத்தூர் மணியிடம் திராவிடர் கழகத்தில் இருந்து விலகிக்கொள்வதாகக் கடிதம் எழுதிவாங்கிக் கொண்டார். அதன் பின்னர் அதுவரைத் தனிதனியாக செயல்பட்டுவந்த, ஆனூர் ஜகதீசன் தலைவராகவும், விடுதலை இராசேந்திரன் பொதுச் செயலாளராகவும் இருந்து இயங்கிவந்த பெரியார் திராவிடர்க் கழகம், திருவாரூர் தங்கராசு, கோவை இராமகிருட்டிணன் ஆகியோர் நடத்தி வந்த தமிழ்நாடு திராவிடர்க் கழகம், புதுவையில் லோகு. அய்யப்பன் தலைமையில் இயங்கிவந்த இராவணன் படிப்பகம்,...