விளிம்பு நிலை சமூகங்களை புறக்கணிக்கும் ஆதிக்க சாதி தேர்தல் அரசியல்!
தமிழக தேர்தல் களத்தில் ஆதிக்கம் செலுத்தும் ஜாதியம் குறித்து ‘தமிழ் இந்து’ (ஏப்.29) நாளேடு வெளியிட்ட கட்டுரையிலிருந்து சில பகுதிகள்: தமிழ்நாட்டு அரசியல் இன்றைக்கு யார் கையில் இருக்கிறது என்று கேட்டால், கருணாநிதி, ஜெய லலிதா பெயர்களைச் சொல்வது சுலபமான பதில். அது உண்மையும்கூட. அதேசமயம், அது மட்டுமே உண்மை அல்ல. தமிழகத்தின் இரு பெரிய கட்சிகளின் நிர்வாகிகளின் சாதிப் பின்னணி இது தொடர்பான உண்மைகளை நாம் ஓரளவுக்குப் புரிந்துகொள்ள வழிவகுக்கும். தமிழகத்தின் மக்களவைத் தொகுதிகளில் ஒடுக்கப்பட்ட சமூகத்தினருக்கு இடஒதுக்கீட்டின் அடிப்படையில் ஒதுக்கப்பட்ட தனித் தொகுதிகள் 7. பொதுத் தொகுதிகள் 32. மொத்தமுள்ள 39 தொகுதி களில் 32 இடங்கள் அ.தி.மு.க. வசம் இருக்கின்றன. பொதுத் தொகுதிகளில் அதன் பிரதிநிதிகளின் சமூகம் சார் பின்னணி இது: வன்னியர் 23.33ரூ, கவுண்டர் 23.33ரூ, முக்குலத்தோர் 20ரூ, நாடார் 6.7ரூ, நாயுடு 3.33ரூ. தமிழகத்தின் சட்டசபைத் தொகுதிகளில் ஒடுக்கப்பட்ட சமூகத்தினருக்கு இடஒதுக்கீட்டின் அடிப்படையில் ஒதுக்கப்பட்ட...