Tagged: விந்து வங்கி

‘விந்து’ வங்கியிலும் வீரியம் பெற்றுள்ள மனுதர்மம்

‘விந்து’ வங்கியிலும் வீரியம் பெற்றுள்ள மனுதர்மம்

குழந்தை பெறுவதற்கான தடைகளை மருத்துவ விஞ்ஞானம் தகர்த்து விட்டது. கருத்தரிக்கும் சக்தி இல்லாமல் போவோருக்கு, நன்கொடை மூலம் குருதிக் கொடை பெறுவதுபோல், விந்துக் கொடை பெறும் முறைகளும் வந்து விட்டன. இதற்காக குருதிகளை சேகரிப்பதுபோல், ‘விந்து’களை கொடையாகப் பெற்று, சேகரிக்கும் மய்யங்கள் செயல்படுகின்றன. இந்த மய்யங்களிலிருந்து விந்துக்களைப் பெற்று, ஊசி மூலம் உடலில் செலுத்தி, கருவை வயிற்றில் வளர்த்து பெறப்படும் விஞ்ஞானக் குழந்தைகள் ஏராளமாக பிறந்து வளர்ந்து வருகின்றனர். குருதிக்கு, சாதி-மத வேறுபாடுகள் கிடையாது. விஞ்ஞானம், ரத்தத்தின் பிரிவுகளை பட்டியலிட்டுள்ளது. சாதிகளைக் கடந்து, ஒவ்வொரு தனி மனிதருக்கும் ரத்தத்தின் பிரிவுகளை கண்டறிந்து, தேவைப்படும்போது அந்தப் பிரிவு ரத்தம் மட்டுமே ஏற்றப்படுகிறது. அதை மட்டுமே உடலும் ஏற்கும். இதேபோல், சாதி மத அடையாளங்களைக் கடந்து பெறப்படும் விந்துகளும், பெண்களின் கருப்பையில் செலுத்தப்படுகின்றன. ஆனாலும்கூட மருந்துவ விஞ்ஞானம் மகத்தான சாதனைகளை செய்து, மனித குலத்தை உய்விக்க வந்தாலும்கூட, ‘மனுதர்ம’ சிந்தனை மட்டும் மாறவே இல்லை....