Tagged: விடியல் பதிப்பகம்

பெரியார் : இன்றும் என்றும் நூல்அறிமுக விழா புதுச்சேரி 11022017

கோவை விடியல் பதிப்பகம் வெளியிட்டுள்ள ‘பெரியார்:இன்றும் என்றும்’ நூலறிமுக விழா புதுச்சேரி வணிக அவையில் 11-2-2017 அன்று மாலை 6-00 மணியளவில் நடைபெற்றது. நிகழ்வுக்கு வந்திருந்தோரை புதுவை லோகு.அய்யப்பன் வரவேற்றார். விடியல் பதிப்பகத்தின் சார்பாக விஜயகுமார் நூல் வெளியீடும் அவசியம், முயற்சி குறித்து  எடுத்துரைத்தார். அடுத்து சூலூர்பாவேந்தர் பேரவை புலவர் செந்தலை கவுதமன் நூலை அறிமுகப்படுத்தி தெளிவான நீண்டதொரு சிறப்புரை ஆற்றினார். அதனைத் தொடர்ந்து ஏற்கனவே நூலுக்கு முன்பதிவு செய்திருந்தவர்களும் பிறரும் நூலின் படிகளைப் பெற்றுகளைப் பெற்றுக் கொண்டனர். இறுதியாக, கழகத் தலைவர் கொளத்தூர் மணி நிறைவுரையாறினார். விழாவில் ஏறத்தாழ 200 படிகள் விற்பனையாகின.