வாசகர்களிடமிருந்து மார்ச் மாத இதழ் கடிதங்கள்
‘அடக்குமுறைகளையும் கொள்கைக்கு பயன்படுத்தும் தலைவர்’ நிமிர்வோம் மார்ச் இதழில் ஈஷா மய்யம் மோசடி குறித்த தகவல்கள் பல உண்மைகளை அம்பலப்படுத்தின. “ஜக்கி அவர்களே பதில் சொல்லுங்கள்” என்ற தலைப்பில் ஜக்கியிடம் எழுப்பப்பட்ட கேள்விகள் அனைத்தும் அர்த்தமுடையவை. -த.முகுலன், ஆக்கூர் 1932ல் குடிஅரசு ஏட்டில் இந்த ஆட்சி முறை ஏன் ஒழிய வேண்டும் என்ற கட்டுரைக்காக பெரியார் கைது செய்யப்பட்டவரலாற்றுப் பின்னணியையும் -அது குறித்த பெரியார் உரையையும் படித்தபோது மெய்சிலிர்த்துப் போனேன். பெரியார் தன் மீதும் தனது இயக்கத்தின் மீதும் அடக்குமுறைகள் வரும் போது அடக்குமுறைகளுக்கு கண்டனம் தெரிவிப்பதைத் தவிர்த்து விட்டு, அவற்றை மேலும் தனது லட்சியத்தை முன்னெடுத்துச் செல்வதற்கான வாய்ப்புகளாக மாற்றியிருக்கிறார்.இதுபெரியாருக்கே உள்ள தனித்தன்மை. வரலாறு நெடுக அவரிடம் இதைப் பார்க்க முடிகிறது. அடக்குமுறை சட்டம் பாய்ந்தது குறித்து பெரியார் எழுதும் போது “இதுபற்றி தான் வருத்தப்படவுமில்லை. அரசை கோபிக்கவும் இல்லை. இதுவரை இப்படி கைது செய்யாமல் இருந்தார்களே என்பதற்காக...