Tagged: வாசகர் கடிதங்கள்

நிமிர் ஜனவரி 2017 இதழ் வாசகர் கடிதங்கள்

அரசு தந்த வீட்டை வாங்க மறுத்த விந்தன்! ‘நிமிர்வோம்’ இதழ் கண்டு மகிழ்ந்தேன்;  ஆழமான கட்டுரைகள் இதழை அலங்கரிக்கின்றன.  நமக்கு இலக்கியம் உண்டா என்ற பெரியாரின் கேள்வி-சிந்திக்க வைக்கிறது. வ.கீதா,ஜெயராணி இருவரின் பொதுவுடைமை -ஜாதி ஒழிப்பு குறித்த கட்டுரைகள். பெரியார் அம்பேத்கர் இயக்கங்கள் மீது விமர் சனங்களை முன்வைக்கின்றன. சுய விமர்சனங்களுக்கு ‘நிமிர்வோம்’ இட மளிப்பது வரவேற்கத்தக்க அணுகுமுறை. ‘நிமிர்வோம்’ மகிழ்வையும் நம்பிக்கைகளையும் ஊட்டுகிறது. -சி.அம்புரோசு, மாவட்டத்தலைவர், தி.வி.க. தூத்துக்குடி.   படைப்பாளி விந்தன் குறித்து பேராசிரியர் வீ.அரசு கட்டுரை, இளைய தலைமுறைக்கு மறைக்கப்பட்ட சிறந்த படைப்பாளியை அறிமுகப்படுத்தும் சிறந்த கட்டுரை. நடிகவேள் எம்.ஆர்.ராதா சிறையிலிருந்தபோது உரையாடி – அவரது வரலாற்றை நூலாக்கிய பெருமையும் அவருக்குண்டு. ‘கூண்டுக்கிளி’ திரைப்படத்தில் காதல் செய்த குற்றம் கண்கள் செய்த குற்றமானால், கண்களைப் படைத்த கடவுள் செய்கை சரியா, தப்பா’ என்று பாடல் எழுதியவர் மக்கள் செல்வாக்குடன் திகழ்ந்த நடிகர் எம்.கே. தியாகராஜ பாகவதரைப் பார்ப்பன...