Tagged: வட்டாட்சியர் அலுவலகம்

கழக போராட்ட எதிரொலி – பெரம்பலூரில் வட்டாச்சியர் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை பூஜை நிறுத்தம்

பெரம்பலூர் மாவட்ட வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒவ்வொரு வெள்ளிகிழமையும் பார்ப்பனரை அழைத்து பூஜை செய்வது பல ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இதை கண்டித்து பெரம்பலூர் திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில்  12.05.2017 அன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவித்து துண்டறிக்கை விநியோகம் செய்யப்பட்டது. இதை அறிந்த பெரம்பலூர்  வட்டாட்சியர், பெரம்பலூர் மாவட்ட திராவிடர் விடுதலைக்கழக தலைவர் துரை. தாமோதரனை அழைத்து பேச்சு வார்த்தை நடத்தி இனிமேல் பூஜை நடைபெறாது என்று உத்திரவாதம் அளித்ததை ஒட்டி போரட்டம் நிறுத்திக்கொள்ளப்பட்டது. கடந்த வெள்ளிகிழமை அன்று பூஜை நடைபெறவில்லை.