Tagged: ராஜிவ் கொலை

இராஜீவ் காந்தி – கொலை அல்ல, மரணதண்டனை

இராஜீவ் காந்தி – கொலை அல்ல, மரணதண்டனை

மறைந்த எங்கள் தோழர் முத்துகுமாருக்கு நடக்கின்ற இந்த வீரவணக்கப் பொதுக்கூட்டத்திற்கு வந்து மேடையிலும் எதிரிலும் அமர்ந்திருக்கின்ற தமிழர்களே, அனைவருக்கும் வணக்கம். இன்று ஈழத்தில் நம்முடைய இன சொந்தங்கள் அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்ற வேளையில், அதற்கு நாம் தெரிந்தோ தெரியாமலோ விரும்பியோ விரும்பாமலோ நாடாக ஏற்றுக்கொண்டிருக்கின்ற இந்திய நாடு உதவிக்கொண்டிருக்கின்ற வேளையில், பல்வேறு சிக்கல்களைப் பற்றி கருத்துக்களைப் பகிர்ந்துகொள்வதற்காக இந்த மேடையில் அமர்ந்திருக்கின்றோம், உரையாடிக்கொண்டிருக்கிறோம். இந்த வேளையில் நான் ஒரு செய்தியை மட்டும் பேச நினைக்கிறேன். நான் பேச நினைப்பது, இந்த நாட்டில் தொடர்ந்து பேசப்பட்டுக் கொண்டிருக்கிற சில முழக்கங்கள். ‘மறக்க மாட்டோம், மன்னிக்க மாட்டோம்’ -இது காங்கிரஸ் முழக்கம்; ‘ஒன்றுபட்ட இலங்கைக்குள் தீர்வு’ – இது மார்க்சிஸ்டு முழக்கம்; ‘சகோதர யுத்தம், சர்வாதிகாரி’ – திமுக முழக்கம். இதில் ஒரு முழக்கத்தை மட்டும், – நாம் யாரை ஒழிக்க நினைக்கிறோமோ – அந்த காங்கிரசின் முழக்கத்தை மட்டும் எடுத்துக் கொள்ள விரும்புகிறேன். ‘மறக்க...

தலையங்கம் அடுத்து….?

தலையங்கம் அடுத்து….?

தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத சக்தியாகத் திகழ்ந்த முதலமைச்சர் ஜெயலலிதா முடிவெய்திவிட்டார். ஆளுமைத் திறன் கொண்ட ஒரு பெண்ணாக தன்னை உயர்த்திக் கொண்டவர். பெண்களால் ஆட்சி சக்கரத்தை வலிமையோடு நகர்த்திச் செல்ல முடியும் என்று நிரூபித்தவர். தான் வழி நடத்திய கட்சிக்கு அவர் சர்வாதிகாரியாகவே செயல்பட்டார். அவரது விரல் அசைப்புக்கு அவரது அமைச்சர்களும், கட்சிப் பொறுப் பாளர்களும், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களும் அடிபணிந்து நின்றனர். ஆண்கள் ஆதிக்கமே கொடிகட்டிப் பறக்கும் அரசியல் உலகில் இது ஓர் அபூர்வக் காட்சி. கருத்து மாறுபாடு களையும் கடந்து பெண்களின் இத்தகைய ஆளுமைத் திறமையை பெரியார் பாராட்டியிருக்கிறார். இந்தியாவின் பிரதமராக இந்திரா காந்தி இருந்தபோது அவரது கொள்கையில் முரண்பாடுகள் இருந்தாலும்கூட ஒரு பெண் நாட்டை நிர்வகிக்க முடியும் என்பதற்கு பெருமையாக சான்று காட்டி, பெரியார்  பேசினார். சுயமரியாதைத் திருமணம் பற்றிய பெரியார் உரையில் (அது பிறகு ஒலித் தட்டாகவும் வெளி வந்தது) இந்தக் கருத்து இடம்...

இதில் என்ன குற்றம், சிந்திப்பீர் தமிழர்களே!

இதில் என்ன குற்றம், சிந்திப்பீர் தமிழர்களே!

ராஜிவ் கொலையில் சதி செய்த குற்றத்தின் கீழ் தண்டிக்கப்பட்டு, 23 ஆண்டுகளாக சிறையில் அடைபட்டுக் கிடந்த 7 பேரை  உச்சநீதி மன்றத் தீர்ப்பைத் தொடர்ந்து தமிழக அரசு விடுதலை செய்ய முன் வந்தது. காங்கிரஸ் கட்சியினர் ராஜிவ் கொலையாளிகளை விடுதலை செய்யலாமா என்று போராட்டம் நடத்துகிறார்கள். நாட்டின் பிரதமரைக் கொன்றவர்களையே விடுதலை செய்தால், சாதாரண மக்களுக்கு எப்படி பாதுகாப்புக் கிடைக்கும் என்கிறார், ராகுல் காந்தி. தமிழக அரசை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்கிறார் சுப்ரமணியசாமி. மக்களின் சிந்தனைக்கு நாம் சில கேள்விகளை முன்வைக்க விரும்புகிறோம்: ராஜிவ் காந்தி கொலையில் சி.பி.அய். 41 பேரை குற்றவாளிகள் என்று அடையாளம் கண்டது. இதில் நேரடி தொடர்புடையவர்களான தாணு, சிவராசன், சுபா உள்ளிட்ட 12 பேர் ஏற்கனவே தேடுதல் வேட்டையில் இறந்து விட்டார்கள். 26 பேர் குற்றம்சாட்டப்பட்டு, ‘தடா’ நீதிமன்றத்தில் நிறுத்தப் பட்டனர். பூந்தமல்லி ‘தடா’ நீதிமன்றம் 26 பேருக்கும் தூக்குத் தண்டனை அறிவித்தது. இந்த...

ராஜிவ் கொலை விசாரணையில் காங்கிரசின்  துரோகம்

ராஜிவ் கொலை விசாரணையில் காங்கிரசின் துரோகம்

தமிழக முதல்வர் 7 பேரை விடுதலை செய்தவுடன் துள்ளி குதிக்கும் காங்கிரசார், ராஜிவ் மீது உண்மையான பற்று கொண்டவர்கள் தானா? ராஜீவ் பாதுகாப்பில் அலட்சியம் காட்டியதோடு தவறு செய்தவர்களை காப்hபற்ற முயன்றார்கள். இதோ, ஆதாரங்களுடன்…. ராஜீவ் காந்தி கொலை நடந்தபோது மத்தியில் ராஜீவின் ‘எடுபிடி’யான சந்திரசேகர் தலைமை யிலான ஆட்சி நடந்தது. வி.பி. சிங் ஆட்சியைகவிழ்த்த காங்கிரஸ், தனது ஆதரவோடு சந்திர சேகர் தலைமையில் ஒரு பொம்மை ஆட்சியை உருவாக்கியிருந்தது. சந்திரசேகர் ஆட்சியில் சட்ட அமைச்சராக இருந்தவர் சுப்ரமணியசாமி. ராஜீவ் கொலை நடந்த அடுத்த 6வது நாளில் ஜெக்தீஷ் சரண்வர்மா (ஜெ. எஸ். வர்மா) என்ற உச்சநீதி மன்ற தலைமையில் ஒரு விசாரணை ஆணை யத்தை சந்திரசேகர் ஆட்சியில் உள்துறை அமைச்சராக இருந்த சுபத்காந்த் சகாய், 1991 மே 27 ஆம் தேதி அறிவித்தார். ராஜீவ் காந்திக்கு செய்யப்பட்ட பாதுகாப்பு ஏற்பாடுகளில் கோளாறுகள், குறைகள் நடந்தனவா என்பது குறித்து ஆராய்வதே இந்த...