சமஸ்கிருதப் பண்பாட்டின் எதிர்ப்பே தமிழர்களுக்கான திராவிடம் – த பரமசிவம் மலேசியா
தமிழ்மலர் நாளேட்டில் (02.07.2017) இனியும் வேண்டுமா திராவிடம்? என்ற தலைப்பில் எழுத்து வித்தகர் வே.விவேகானந்தன் எழுதியுள்ள கட்டுரை மாநாட்டின் நோக்கத்தை திசைதிருப்புவதாகவும் முரண்பட்ட வாதங்களையும் உள்ளடக்கியதாகவும் இருக்கிறது திராவிடத்தைத் தூக்கி நிறுத்துவதற்காகவே கூட்டப்பட்ட இந்த மாநாட்டுக்கு தமிழ் உணர்வாளர்கள் வரச்செய்வதற்காக தமிழ் உணர்வாளர்கள் மாநாடு என்று தலைப்பிட்டு ஏமாற்றுவேலை செய்துள்ளனர் என்று குற்றம் சாட்டுகிறது அக்கட்டுரை. மாநாட்டின் தலைப்பு இனத்தால் திராவிடன், மொழியால் தமிழன், உலகத்தால் மனிதன் என்பதாகும். மாநாட்டு சுவரொட்டி அழைப்பிதழ் அறிவிப்புகளும் விளம்பரங்களும் இதை வெளிப்படையாகவே பறைசாற்றுகின்றன. இதில் ஏமாற்றுவதற்கு என்ன இருக்கிறது? திராவிட மொழிக்குடும்பத்தை ஆராய்ந்த கால்டுவெல் – தேவநேயப் பாவாணர் போன்ற ஆய்வாளர்கள் திராவிட மொழிக் குடும்பத்தின் மூத்த மொழி தமிழ் என்பதையும், இந்தோ அய்ரோப்பிய மொழிக்குடும்பத்தைச் சார்ந்த சமஸ்கிருதத்திலிருந்து தமிழ் முற்றிலும் வேறுபட்டது என்பதையும் தங்கள் ஆய்வுகள் வழியாக நிலைநாட்டினர். தமிழுக்கு மூலம் சமஸ்கிருதம் என அதுவரை ஆரியப் பார்ப்பனர்கள் கூறிவந்த கருத்தை ஆழமாக மறுத்தன இந்த...