Tagged: மூளைச் சாவு

தலையங்கம் : இருக்கின்றாய், இதயமாக!

தலையங்கம் : இருக்கின்றாய், இதயமாக!

இதயத்தின் துடிப்புக்கு ஜாதி கிடையாது, மதம் கிடையாது, ஆண்-பெண் பாகுபாடு கிடையாது. தேசம்-மொழிகளையும் கடந்து நிற்கிறது. இந்த உடலின் இயக்கம்; மனித உடலும், உடல் இயக்கமும் வெளிப் படுத்தும் ஒரே அடையாளம் மனிதர்கள் என்ற ஒன்றை மட்டும்தான். 27 வயதே நிறைந்த இளைஞன் லோகநாதன் சாலை விபத்துக்குள்ளாகி அவரது மூளையின் இயக்கம் மரணித்துவிட்ட நிலையில் இதயம் மட்டும் உயிர்ப்புடன் துடித்தது. அதே நேரத்தில் அடையாறு தனியார் மருத்துவமனை ஒன்றில் இதயப் பாதிப்புக்கு உள்ளான மும்பையைச் சார்ந்த அலோவி என்ற 27 வயது பெண்ணுக்கு மாற்று  இருதயம் ஒன்று கிடைத்துவிட்டால் உயிர் பிழைத்துவிட முடியும்! மரணத்தைத்தழுவிவிட்ட தனது மகனின் இருதயம் வேறு ஒரு உடலில் துடித்துக் கொண்டிருக்குமானால் – அன்பு மகனின் மறக்க முடியாத நிலைத்த நினைவாக இருக்குமல்லவா? அப்படி ஒரு அறிவார்ந்த முடிவுக்கு வந்தார் அந்தத் தாய். அவர் அரசு மருத்துவமனையில் செவிலியர். பெருமைக்குரிய அவரது பெயர் இராஜலட்சுமி. துடிக்கும் இருதயத்தை...

ஜாதிகளை கடந்து மாற்றப்படும் உறுப்புகள்

ஜாதிகளை கடந்து மாற்றப்படும் உறுப்புகள்

தமிழகத்தில் ஒரு மாதத்துக்கு 30 உடலுறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சை கள் மேற்கொள்வதற்கு முயற்சிகள் மேற் கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்காக தமிழகத்தின் பல்வேறு மருத்துவமனை களுடன் ஆலோசித்து வருவதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவிக் கின்றனர். மூளைச் சாவு : தமிழ்நாட்டில், ‘மூளைச் சாவு அடைந்தோர் உடலுறுப்பு கொடைத் திட்டம்’ 2008, அக்டோபரில் தொடங்கப்பட்டது. இந்தத் திட்டம் தொடங்கிய பின் உடலுறுப்புகள் கொடை பெற்று பிற நோயாளிகளுக்குப் பொருத்தப் படுகின்றன. மூளைச் சாவு அடைந்தவர்களிடம் இருந்து இருதயம், நுரையீரல், கல்லீரல், சிறுநீரகம், கணையம், சிறுகுடல், இருதய வால்வுகள், கண்கள், தோல், இரத்தக் குழாய்கள் ஆகிய 10 உறுப்புகளை கொடையாகப் பெற முடியும். தமிழகத்தில் இதுவரை மூளைச்சாவு அடைந்த 676 பேர் தங்கள் உடலுறுப்புகளை கொடை அளித் துள்ளனர். தமிழகத்தில் ஒரு மாதத்துக்கு மூளைச் சாவு அடைந்த 15 முதல் 20 பேரின் உடலுறுப்புகளை அவர்களது உறவினர்கள் கொடையளிக்கின்றனர். ஆனால், மூளைச் சாவு...