Tagged: மூட நம்பிக்கை

பூஜைக்கு போகும் விண்வெளி ராக்கெட்டுகள்: ‘பாரத ரத்னா’ விஞ்ஞானி கண்டனம்

பூஜைக்கு போகும் விண்வெளி ராக்கெட்டுகள்: ‘பாரத ரத்னா’ விஞ்ஞானி கண்டனம்

பாரத ரத்னா விருது பெற்றுள்ள விஞ்ஞானி சி.ன்.ஆர். ராவ், பெங்களூரில் நவம்பர் 24 அன்று பேட்டி அளித்தார். அப்போது ஒரு செய்தியாளர் “இஸ்ரோ சார்பில் ஒவ்வொரு முறையும் ராக்கெட் அனுப்பும் முன்பு திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அதன் மாதிரி வடிவத்தை வைத்து பூஜை செய்யப்படும் வழக்கம் இருந்து வருகிறது. அது பற்றி உங்கள் கருத்து என்ன?” என்றார். அதற்கு பதில் அளித்த விஞ்ஞானி சி.என்.ராவ், “அது மூட நம்பிக்கை. எனக்கு அதில் எனக்கு நம்பிக்கை கிடையாது. பயத்தின் காரணமாக மனிதர்கள் பூஜைகள் செய்தால் தாம் செய்கின்ற பணி வெற்றி பெறும் என்று நம்புகிறார்கள். அதற்கு என்ன செய்ய முடியும்? இதுபோன்ற நம்பிக்கைகள் எனக்கு இல்லை. நான் ஜோதிடத்தையும் நம்புவதில்லை. மேலும் நான் தகவல் தொழில்நுட்பத்திற்கு எதிரானவன் என்ற கருத்தும் நிலவுகிறது. அதில் உண்மையில்லை. சீனாவில் அறிவியல் துறையில் அதிக அளவில் முதலீடு செய்யப்படுகிறது. இந்தியர்கள் எதையும் எளிதாக எடுத்துக் கொள்கிறார்கள். அறிவியல்...

‘பூசணிக்காய்’க்குள் புதைந்து கிடக்கும் ஜாதி-மூட நம்பிக்கை!

‘பூசணிக்காய்’க்குள் புதைந்து கிடக்கும் ஜாதி-மூட நம்பிக்கை!

காய்கறிகளில் உடல்நலத்துக்கான சத்துகள் அடங்கியிருப்பதை விஞ்ஞானம் தான் கண்டுபிடித்து அறிவித்தது. அதற்குள் மூடநம்பிக்கைகளையும் ஜாதியையும் பார்ப்பனர்கள் திணித்தார்கள். வீடுகளில் ‘திருஷ்டி’ கழிக்க பூசணிக்காய் கட்டினா லும் அந்த வீடுகள், அதற்கான விபத்து பாதிப்புகளிலிருந்து தப்புவதில்லை. ஆனாலும், மூடநம்பிக்கை தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இது குறித்து ‘ஈஷா’ சத்குரு வெளியிட்ட கருத்து இது: கேள்வி: புதுமனைப் புகுவிழா போன்ற பல நேரங்களில் வீட்டின் முன் சாம்பல் பூசணிக்காயைக் கட்டித் தொங்க விடும் பழக்கம் நமது கலாச்சாரத்தில் இருக்கிறது. பூசணிக்காயை ஏன் கட்டுகிறார்கள், அந்தக் காய்க்கு மட்டும் அப்படி என்ன சிறப்பு? சத்குரு: “உணவுகளில் மிகவும் அதிக பிராண சக்திக் கொண்ட சில உணவுகள் உள்ளன. அந்த உணவுகளிலும் மகா பிராண சக்தி கொண்டது சாம்பல் பூசணி. அந்தக் காய் மிக அதிகமான நேர்மறை பிராண சக்தி கொண்டது. எனவேதான், அதை வீட்டு முன் கட்டித் தொங்க விடுகிறோம். புதிய வீட்டில் குடியேறும் போது,...

மூட நம்பிக்கையால் பாழாகும் தாமிரபரணி

மூட நம்பிக்கையால் பாழாகும் தாமிரபரணி

‘நெல்லை தாமிரபரணி கல்யாண தீர்த்தம் தூய்மை அறக்கட்டளை’யும் ஐந்திணைத் தொண்டு நிறுவனமும், ஊர்க்காவல் படையினருடன் இணைந்து பாபநாசம் தாமிரபரணி ஆற்றைச் சுத்தம் செய்தபோது ஆற்று மணலில் புதையுண்டுக் கிடந்த சுமார் 125 டன் அழுக்குத் துணிகளை வெளியே எடுத்திருக்கிறார்கள். இவையெல்லாம் நேர்த்திக் கடனுக்காக பக்தர்கள் வீசி எறிந்தவை. இதில் பட்டுச் சேலை, வேட்டிகளே அதிகம். இதுபோன்ற அழுக்குத் துணி மற்றும் பூஜைப் பொருட்களால் ஆற்று நீர் கடுமையாக மாசுபடுகிறது என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள். திதி கொடுக்கும்போது புதிய வேட்டி, சேலைகளை ஆற்றில் போட்டால் அது முன்னோர்களுக்குப் போய்ச் சேர்ந்துவிடும் என்பது நம்பிக்கை. இதனால் தாமிரபரணி ஆற்றுத் தண்ணீர் மாசுபட்டு பிற உயிரினங்கள் வாழ லாயக்கற்றதாகப் போய் விட்டது. நீரின் மேல் எண்ணெய்ப் படலம் தேங்கி நிற்பதால் ஆக்சிஜன் குறைவு ஏற்பட்டு மீன், தவளைகள் அழிந்து போகின்றன. தண்ணீருக்குள் கிடக்கும் உடைந்த பாட்டில்களால் தினமும் பத்து பேருக்காவது ரத்தக் காயம் ஏற்படுவது தவிர்க்க...