“250 உதிரி பாகங்களில் ஓடாத வண்டியா, இந்த எலுமிச்சம் பழத்தாலா ஓடப் போவுது?”
தெரு ஓரத்தில் மக்களைக் கூட்டி தாயத்து விற்கும் மந்திரவாதிகளின்மோசடிகளைக்கூட நம்பிக் கொண்டிருந்தவர்கள் நாம். இந்த மோசடிகளை அம்பலப்படுத்தி திரைப்படங்களில்கூட காட்சிகள் வைக்கப்பட்டிருந்தன. ஒரு திரைப்படத்தில் நடிகர் மயில்சாமி தாயத்து விற்பார். கூட்டத்தோடு கூட்டமாக தனது ஆளையே நிற்க வைத்து, பிறகு அந்த ஆளையே மந்திரத்தால் மயங்கி விழுந்தவர்போல நடிக்க வைத்து படுக்க வைப்பார். சூழ்ந்து நிற்கும் கூட்டம் பற்றி நன்றாக புரிந்த அந்த ஆசாமியை படுக்கவைத்து உடலையும் முகத்தையும் துணியால் மூடி, மயில்சாமி கூட்டத்தினர் பற்றி கேள்வி கேட்பார். மயங்கி படுத்திருப்பது போல் நடிக்கும் ஆசாமியிடமிருந்து சட்டென்று பதில்கள் வரும். வேடிக்கைப் பார்ப்பவர்கள் சட்டைப் பையில் உள்ள பணம் முழுவதையும் எடுத்து போடா விட்டால் ‘இரத்தம் கக்கி சாக வேண்டி வரும்’ என்று மந்திரவாதி மிரட்டுவார். கூட்டத்தில் நிற்கும் நடிகர் வடிவேலு பையில் உள்ள பணம் முழுவதையும் போடாமல் 10 ரூபாய் மட்டுமே போட, மயங்கிக் கிடக்கிற மனிதன், அந்த ஆள் பணம் முழுவதையும் போடவில்லை என்று...