அரை ‘டிரவுசர்’ போய் முழு ‘டிரவுசர்’ வந்தது!
ஆர்.எஸ்.எஸ். சீருடையை மாற்றிக் கொண்டு விட்டதாம். அரைக்கால் காக்கி சட்டைக்குப் பதிலாக முழுக்கால் சட்டை (பேண்ட்) போட ஆரம்பித்து விட்டார்கள். 90 ஆண்டுகால பாரம்பர்யத்தை மாற்றிக் கொண்டுவிட்டார்கள். ‘காலத்துக்கேற்ப மாற வேண்டும் என்கிறார்’ ஆர்.எஸ்.எஸ். தலைவர் பகவத். சரிதான்; 90 ஆண்டுகாலமாக பெண்களை ஆர்.எஸ்.எஸ். உறுப்பினராக்க முடியாது என்று தடை போட்டு வைத்திருக்கிறீர்களே, அதையும் மாற்றிக் கொள்ள வேண்டியது தானே! அரைக்கால் சட்டை போடுவதற்குத்தான் பெண்களுக்கு சங்கடம்; இப்போதுதான் முழுக்கால் ‘பேண்ட்’ வந்துவிட்டதே! இனிமேலாவது பெண்களை சேர்க்கலாமே! ‘நாம் எப்போதும் இந்துக்கள்; இந்துக்களுக்குள் பேதம் கூடாது’ என்கிறார் பகவத். நல்லது; இதற்குப் பிறகாவது, “நான் பிராமணன்; உயர்குலத்தவன்; ஏனைய இந்துக்கள் ‘சூத்திரர்கள்’; என்னுடைய ‘பிராமண’ அடையாளத்துக்காகவே பூணூல் போடுகிறேன்” என்று பார்ப்பனர்கள் பூணூல் போட்டு திரிகிறார்களே! ஆர்.எஸ்.எஸ். உறுப்பினராகிவிட்டால் எந்த ‘இந்து’வும் பூணூல் போடக் கூடாது என்று உடம்புக்கும் ஒரு பொதுவான அடையாளத்தைக் கொண்டு வரலாமே! ‘இந்து’ என்றால் ஒருவர் விபூதியும், ஒருவர் நாமமும்,...