Tagged: முழக்கம் உமாபதி

0

மேதகு பிரபாகரன் பிறந்த நாள் பதாகை நிறுவியதற்காக காவல்துறையின் கொலை வெறித் தாக்குதலுக்கு உள்ளானார் ‘முழக்கம்’ உமாபதி முறையான சிகிச்சை தர நீதிமன்றம் உத்தரவு!

‘முழக்கம் உமாபதி’க்கு முறையான சிகிச்சைகளை அளித்து அறிக்கை தர வேண்டும் என்று அரசு மருத்துவமனை தலைவருக்கு உயர்நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ செய்தியாளர் திராவிடர் விடுதலைக் கழகச் செயல் வீரர் ‘முழக்கம்’ உமாபதி, காவல்துறையால் நவம்பர் 26 அன்று கொலைவெறித் தாக்குதலுக்கு உள்ளானதைத் தொடர்ந்து கழக வழக்கறிஞர்கள் துரை. அருண், திருமூர்த்தி, உயர்நீதிமன்றத்தில் நவ.28ஆம் தேதி வழக்கு தொடர்ந்து, அவசர விசாரணைக்கு ஏற்க வேண்டும் என்று நீதிபதியிடம் வலியுறுத்தினர். நீதிபதி வி. இராமசுப்பிரமணியன், வழக்கை விசாரணைக்கு அனுமதித்தார். கொலைவெறித் தாக்குதலுக்கு உள்ளான ‘முழக்கம்’ உமாபதிக்கு தமிழக அரசு ரூ.25 இலட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும், கொலைவெறித் தாக்குதல் நடத்திய காவல்துறையினர்மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மனுவில் கோரப்பட்டிருந்தது. உடனடி நடவடிக்கையாக உரிய மருத்துவ வசதிகளை செய்து தரவேண்டும் என்றும், வழக்கை சி.பி.சி.அய்.டி. விசாரணைக்கு மாற்றி, தாக்குதல் நடத்திய காவல்துறையினரை உடனடி பதவி நீக்கம் செய்ய...