Tagged: முள்ளிவாய்க்கால்

முள்ளி வாய்க்கால் பேரழிவு 7ம் ஆண்டு நினைவேந்தல் மன்னார்குடி 19052016

முள்ளி வாய்க்கால் பேரழிவு 7ம் ஆண்டு நினைவேந்தல் திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் மன்னார் குடியில் நடைபெற்றது. மன்னார்குடி மே.19 இலங்கையில் கடந்த 2009ம் ஆண்டு மே மாதம் 18ம் தேதி அன்று அப்பாவி தமிழர்கள் மீது தடை செய்யப்பட்ட ரசாயன ஆயுதங்கள் கொத்து குண்டுகளை வீசி ஒரே நாளில் ஒன்றை லட்சம் தமிழ் மக்களை சிங்கள அரசு முள்ளி வாய்கால் பகுதியில் கொன்று குவித்தது, அப்போரில் இறந்த அப்பாவி பொதுமக்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் முள்ளி வாய்க்கால் 7ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் மன்னார்குடியில் பேருந்து நிலையம் அருகில் மாவட்ட செயலாளர் இரா.காளிதாசு தலைமையில் நடைபெற்றது. திருவாரூர் மாவட்ட லாரி உரிமையாளர்கள் சங்க துணைத்தலைவர் சேரன்குளம் செந்தில் குமார், மதிமுக நகர செயலாளர் சன் சரவணன், நாம் தமிழர் கட்சி மன்னார்குடி சட்ட மன்ற தொகுதி வேட்பாளர் வேதா பாலா ஆகியோர் முன்னிலை வகித்தனர்....

தமிழர் ‘இனப்படுகொலை’ உறுதியாகிறது

தமிழர் ‘இனப்படுகொலை’ உறுதியாகிறது

முள்ளிவாய்க்கால் படுகொலையைத் தொடர்ந்து, முதலில் அயர்லாந்து நாட்டிலுள்ள ‘மக்கள் நிரந்தரத் தீர்ப்பாயம்’ விசாரணை ஒன்றை நடத்தியது. வியட்நாமில் அமெரிக்காவின் மனித உரிமை மீறல்கள் போர்க் குற்றங்களை அம்பலப்படுத்திய பெருமை இந்த ஆணையத்துக்கு உண்டு. நேர்மையும் நம்பகத் தன்மையும் கொண்ட இந்த ஆணையத்தின் முன் இலங்கை இராணுவத்தின் போர்க் குற்றம் தொடர்பாக ஏராளமான ஆவணங்கள் சான்றுகளாக உலகத் தமிழர் அமைப்புகளின் முயற்சியால் சேகரித்து முன்வைக்கப்பட்டன. மனித உரிமை மீறல்கள் போர்க் குற்றங்களை உறுதிப்படுத்தியது, இந்த விசாரணை ஆணையம். ஆனால், இனப்படுகொலைக்கான அறிகுறிகள் தெரிகிறது என்றும், அந்தக் குற்றச்சாட்டை உறுதிப்படுத்த சான்றுகள் தேவை என்றும் கூறியது. மீண்டும் மக்கள் நிரந்தரத் தீர்ப்பாயம் இது குறித்து இம்மாதம் ஜெர்மனியில் கூடி விரிவாக ஆராய்ந்து இனபடுகொலை குறித்து விசாரிக்க நிபுணர் குழு ஒன்றை நியமித்திருக்கிறது. இந்த நிலையில் சிங்கள இராணுவத்துக்கு அனைத்து உதவிகளையும் செய்து வந்த இந்திய அரசின் பிரதிநிதி ஒருவரே ‘இனப் படுகொலை’ நடந்தது உண்மையே...