‘வரலாற்றில் வரம்பைக் கடந்த தலைவர்’
விஞ்ஞானி – கல்வியாளர் – இலக்கியவாதி என்று பன்முகத் திறமையோடு வாழ்ந்த முனைவர் வி.சி. குழந்தைசாமி, கடந்த டிசம்பர் 10ஆம் தேதி 87ஆம் அகவையில் முடிவெய் தினார். அண்ணா பல்கலைக்கழகம், மதுரை காமராசர் பல்கலைக்கழகம், இந்திரா தேசிய திறந்த நிலை பல்கலைக்கழகங்களின் துணை வேந்தராக திறம்பட பணியாற்றியவர். சாகித்ய அகாடமி, பத்மஸ்ரீ விருதுகளைப் பெற்ற அவர் கோவை மாவட்ட கிராமம் ஒன்றில் பிற்படுத்தப்பட்ட சமூகத்தில் பிறந்தவர். எல்லாவற்றுக்கும் மேலாக அவர் ஒரு பெரியாரிஸ்ட். பெரியார் வாழ்ந்த காலத்தில் அவருடன் நெருக்கமாக இருந்த இன உணர்வாளர். பெரியார் மறைந்த 1973ஆம் ஆண்டில் சிந்தனையாளர் பேரவை, சென்னை மத்திய நூலகக் கட்டிடத்தில் நடத்திய பெரியார் இரங்கல் கூட்டத்தில் அவர் நிகழ்த்திய உரையை இங்கு வெளியிடுகிறோம். இந்த உரை நிகழ்த்தியக் காலத்தில் அவர் தமிழ்நாடு அரசின் தொழில்நுட்பக் கல்வி இயக்குனர். “தென்னகத்தின் ஒரு தலைவர்; ஒரு நூற்றாண்டு, திராவிடத்தின் வளர்ச்சிக்கே, தன்னைத் தந்த தன்னிகரில்லாத் தமிழர்;...