Tagged: மாநாட்டுத் தீர்மானங்கள்

பா.ஜ.க.வின் பார்ப்பனிய ஒற்றைப் பண்பாட்டுத் திணிப்பை முறியடிக்க – கழக மாநாடு அறைகூவல்

4-6-2017 ஞாயிறு அன்று சென்னை, திருவான்மியூரில் நடைபெற்ற ‘தமிழர் பண்பாட்டுப் பாதுகாப்பு’ மாநாட்டில் நிறை வுரையாற்றிய கழகத் தலைவர் கொளத்தூர் மணி, மாநாட்டுத் தீர்மானங்களை முன் மொழிந்தார்.  தீர்மானங்கள் விவரம்: 1)            1938ஆம் ஆண்டிலேயே தமிழ்நாட்டுப் பள்ளி களில் இராஜகோபாலாச்சாரி கட்டாயமாக இந்தி மொழிப் பாடத்தைத் திணித்தபோது, ‘பெரியார் தலைமையில் தமிழறிஞர்களும் இணைந்துப் போராடி, இந்தித் திணிப்பைத் தடுத்து நிறுத்தியது தமிழ்நாடு ஆகும். 1965 ஆம் ஆண்டிலிருந்து அலுவல் மொழி இந்தி என்று அரசியல் சட்டம் கூறிய நிலையிலும் தமிழ் நாட்டில் இந்திக்கு இடமில்லை என்று 1968இல் இருமொழித் திட்டத்தை அறிவித்த நாடு தமிழ்நாடு. 1963ஆம் ஆண்டு அலுவல் மொழிச் சட்டம் இந்தியை அலுவல் மொழி என்று அறிவித்த நிலையிலும் அந்த சட்டம் தமிழ்நாட்டுக்கு மட்டும் பொருந்தாது என்று 1976ஆம் ஆண்டு நடுவண் அரசின் அலுவல் மொழி விதிகளே ஏற்றுக் கொண்டது என்பது வரலாறு. கடந்த ஐம்பது ஆண்டுகளாக இந்திக்கு...