Tagged: மாதவன் இல்லம்

தோழர் மாதவன் இல்லம் படத்திறப்பு நிழற்படங்கள்

படத்திறப்பு ! திருப்பூர் மாஸ்கோ நகர் மாதவன் அவர்களின் மறைந்த தந்தையார் படம் கழக தலைவரால் திறந்து வைக்கப்பட்டது. திருப்பூர் கழக தோழர்கள் மாஸ்கோ நகர் மாதவன், நாகராஜ் அவர்களின் தந்தையார் திரு.சின்னராசு அவர்கள் கடந்த 27.03.2016 அன்று முடிவெய்தினார். மறைந்த திரு.சின்னராசு அவர்களின் படத்திறப்பு 03.04.2016 அன்று மாலை சாமுண்டி நகரில் உள்ள தோழர் மாதவன் இல்லத்தில் நடைபெற்றது. அன்னாரின் படத்தை கழக தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் திறந்து வைத்தார். இப்படத்திறப்பு நிகழ்வில் கழக பொதுச்செயலாளர் தோழர் விடுதலை ராஜேந்திரன்,அமைப்புச் செயலாளர் தோழர் ரத்தினசாமி,பொருளாளர் தோழர் திருப்பூர் துரைசாமி,மாவட்ட செயலாளர் தோழர் முகில்ராசு, மாநில அறிவியல் மன்ற அமைப்பாளர் தோழர் சிவகாமி,மாநகர செயலாளர் தோழர் நீதிராசன்,தோழர் அகிலன் உள்ளிட்ட தோழர்கள் கலந்து கொண்டனர்.