மலேசியா கூட்டங்களில் பெரியார் எதிர்ப்பாளர்களின் கலகம்: நடந்தது என்ன?
மலேசியாவில் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், பேராசிரியர் மார்க்ஸ் பங்கேற்ற கூட்டங்களில் பெரியார் எதிர்ப்பாளர்களும் திராவிட எதிர்ப்பாளர்களும் கலகத்தை உருவாக்கி கூட்டங்களை தடுத்து நிறுத்த முயன்றனர். நடந்தது என்ன என்பதை பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் அவர் களோடு அனைத்து நிகழ்ச்சிகளிலும் பங்கேற்ற திராவிடர் விடுதலைக் கழக இணையதள பொறுப்பாளர் க. விஜய குமார் விளக்கு கிறார். உலகத் தமிழ் உணர்வாளர் மாநாட்டை யொட்டி மலேசியா முழுதும் 30க்கும் மேற்பட்ட பரப்புரைக் கூட்டங்களில் தமிழகத் திலிருந்து வந்த பெரியாரிய கருத்துரை யாளர்கள் பங்கேற்றுப் பேசினர். பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், பேராசிரியர் அ. மார்க்ஸ் இருவரும் கோலாலம்பூரை மய்யமாகக் கொண்ட சுற்றுப்புறங் களில் ஒவ்வொரு நாள் மாலையிலும் பேசினர். ஜூன் 26ஆம் தேதி பக்தாங் பெர்சுந்தைபட்டினம், 27- உலுசி யாங்கூர், 28-காப்பர், 29-கிளாங், 30-பெட்டாலிங் ஜெயா, ஜூலை-1 – டிங்களூர் தமிழ்ப் பள்ளி, 2-கோலாலம்பூர், து.சம்பந்தம் மண்டபம் ஆகிய இடங்களில் இந்த...