Tagged: மயிலாடுதுறை திவிக

சமஸ்கிருத திணிப்பிற்கு எதிராக மயிலாடுதுறையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்!

மத்திய மோடி அரசின் சமஸ்கிருத திணிப்பை கண்டித்தும்,மத்திய அலுவல் மொழி பட்டியலில் இருந்து சமஸ்கிருதத்தை நீக்கிட வலியுறுத்தியும் திராவிடர் விடுதலைக்கழகத்தின் சார்பில் 08-.07.2016 அன்று மாலை 4 மணிக்கு ,மயிலாடுதுறை.,சின்னக்கடை வீதி,நகராட்சி அலுவலகம் அருகில் நடைபெற்றது. நகர அமைப்பாளர் G.R..செந்தில் குமார் தலைமை தாங்கினார்.மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டியக்கம் பேராசியர் ஜெயராமன் அவர்கள் கண்டன உரையாற்றினார். மேலும் சபீக் அகமது SDPI கட்சி, அப்துல் கபூர்,மனித நேய மக்கள் கட்சி.சுப்பு.மகேஷ்,தமிழர் உரிமை இயக்கம். வழக்குறைஞர் சங்கர்,கிழக்கு கடல் மக்கள் பாதுகாப்பு இயக்கம்.வேலு.குணவேந்தன்,விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட தோழர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.