தலையங்கம்: அவமதிக்கிறது, இந்திய ஆட்சி!
ஒன்றரை லட்சம் தமிழர்கள் இனப்படுகொலை களுக்கு உள்ளான வரலாற்றின் கொடூரத்துக்கு நீதி கேட்டால், ‘ஓட்டு அரசியல்’ என்று சிறுமைப்படுத்து கின்றன பார்ப்பன ஏடுகள். இனப்படுகொலை நடந்த நாட்டில் காமன்வெல்த் மாநாடு கூட்டப்படுகிறதே என்பது குறித்து இவர்களுக்கு கவலை இல்லை. மன்மோகன் சிங் பங்கெடுக்காமல் தவிர்த்து விட்டாரே என்பதற்காக, அனலில் இட்ட புழுவாகத் துடிக்கிறார்கள். கடந்த 20 ஆண்டுகளில் 11 முறை காமன்வெல்த் மாநாடு கூடியிருக்கிறது. இதில் 5 முறை இந்தியாவின் பிரதமர் பங்கேற்றது இல்லை; இது 6 ஆவது முறை. அவ்வளவு தான்! மன்மோகன் சிங் பங்கேற்காமல் போனதால் இலங்கை யுடனான உறவு துண்டிக்கப்பட்டுவிட்டதுபோலவும், அதற்குப் பிறகு எப்படி, தமிழர் உரிமைக்கும், மீனவர் பாதுகாப்புக்கும் இலங்கையிடம் பேச முடியும் என்றும் ‘இந்து’வின் ஆங்கில மற்றும் தமிழ் ஏடுகள் குடம் குடமாக கண்ணீர் வடிக்கின்றன. 2009 இல் இனப்படுகொலை உச்சக்கட்டத்தில் நடந்த நேரத்தில்கூட ராஜபக்சே தரப்பு நியாயங்களை எழுதிக் கொண்டிருந்த ஏடுதான் ‘இந்து’...