நாங்கள் ‘மனிதி’; மவுனம் உடைப்போம்!
பெண்கள் அமைப்புகள், அமைப்புகளைக் கடந்து ‘மனிதி’ என்ற அடையாளத்தோடு ஒன்றுதிரண்டு ‘நடைப் பயணம்’ நடத்தினர். கடந்த அக்டோபர் முதல் தேதி சென்னை காந்தி சிலையில் திரண்ட 500 பெண்கள், முழக்கங்களோடு மெரினா வரை நடந்து சென்றனர். முன்னாள் துணைவேந்தர் வசந்திதேவி இந்தப் பயணத்தைத் தொடங்கி வைத்து, பெண் விடுதலைக்கு சரியான கருத்துகளை பெரியார் விட்டுச் சென்றதை நினைவுகூர்ந்து உரையாற்றினார். தமிழகம் முழுதுமிருந்தும் பல்வேறு அமைப்புகள், இயக்கங்களைச் சார்ந்த பெண்களும் பெண்ணுரிமையை வலியுறுத்தும் ஆண் தோழர்களும் இதில் பங்கேற்று முழக்கமிட்டு வந்தனர். திராவிடர் விடுதலைக் கழகத்தின் சென்னை மாவட்ட தோழர்களும் கழக சார்பில் பங்கேற்றனர். உடுமலை கவுசல்யா, பேராசிரியர் சரசுவதி, ஓவியா, வழக்கறிஞர் அருள் மொழி, கவிஞர் சல்மா, செல்வி, பரிமளா, மக்கள் மன்றம் மகேசு உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர். பேரணியில் கீழ்க்கண்ட உறுதிமொழிகளை பெண்கள் எடுத்தனர். மனிதியாகிய நான் மானமும் அறிவும் தன்விழிப்பும் கொண்டவளாய் இருப்பேன்; மனிதியாகிய நான் சக மனிதர்களிடம்...