Tagged: மத்திய அரசு பணியிடம்

மத்திய அரசுப் பணிகளில் தமிழர்களின் வேலை வாய்ப்பு உரிமைகள் பறிப்பு

மத்திய அரசுப் பணிகளில் தமிழர்களின் வேலை வாய்ப்பு உரிமைகள் பறிப்பு

“முஜே தமில் நஹி மாலும், இந்தி மே போலோ” (எனக்கு தமிழ் தெரியாது, இந்தியில் சொல்). இன்று தமிழகத்தில் உள்ள மத்திய அரசு அலுவலகங்கள், இரயில்வே பயணச் சீட்டு பெறும் இடங்கள், வாழ்நாள் காப்பீடு, பொதுக் காப்பீடு மற்றும் பொதுத் துறை வங்கிகளில் பணி யாற்றும் ஊழியர்களிடம் தமிழர்கள் இவ்வார்த்தைகளை எதிர் கொள் கிறார்கள். டெல்லி அரசுகளின்  கயமைத்தனத்தினால், சூழ்ச்சியினால் கடந்த பத்தாண்டுகளாக  தமிழகத்தில் இயங்கும் மத்திய அரசுத்துறைகளில் தமிழர்களுக்கான வேலை வாய்ப் புரிமை தட்டிப் பறிக்கப்பட்டுள்ளது. இது சேவைத்துறைகளில் மட்டு மல்லாது தமிழகத்தில் செயல்படும் மத்திய அரசின் தொழிற்துறைகளான (Factories & Enterprises)  என்.எல்.சி (NLC), ஓ.என்.ஜி.சி (ONGC), பி.எச்.இ.எல் (BHEL), துப்பாக்கி தொழிற்சாலை, டாங்கி தொழிற்சாலை, இராணுவ உடை தயாரிப்பகம், (Defence Factories) இணைப்பு பெட்டி தொழிற்சாலை, கல்பாக்கம் அணுமின் நிலையம்  ஆகிய தொழிற்சாலைகளில் இந்த நிலைதான். மத்திய அரசு அலுவலகங்கள், தொழிற்சாலைகள், பொதுத்துறை நிறுவனங்கள், காப்பீட்டு நிறுவனங்...