Tagged: மதிய உணவு திட்டம்

பார்ப்பனரல்லாத இடது சக்திகளின் சாதனைகள் – ஆர்.முத்துக்குமார்

கல்லடி விழும் காய்த்த மரம் என்று நீதிக் கட்சியைச் சொல்லிவிடலாம். எத்தனை யெத்தனை விமரிசனங்கள் அந்தக் கட்சியின் மீது. நூற்றாண்டைக் கொண்டாடும் வேளையிலும் அதன்மீதான சொல்லடிகள் நின்றபாடில்லை. வேடிக்கை என்ன வென்றால், ஒவ்வொரு விமரிசனத்துக்கும் உரிய முறையில் பதில் தரப்பட்டிருக்கிறது. ஆனாலும் அவற்றையெல்லாம் மறந்துவிட்டு அல்லது மறைத்துவிட்டு, வலுக்கட்டாயமாக விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன. பெண்களுக்கு அதிகாரம் பற்றி இன்றைக்கு அறிவுஜீவிகள் அதிகம் பேசிக் கொண்டிருக்கிறார்கள். சாதி ரீதியாக ஒடுக்கப்பட்டவர்கள் பட்டியல் சாதி மக்கள் என்றால், எல்லா மட்டத்திலும் ஒடுக்கப்பட்டவர்களாக இருப்பவர்கள் பெண்கள். மேல்தட்டு, நடுத்தட்டு, கீழ்த்தட்டு என்று எந்த வித்தியாசமும் பெண்கள் விஷயத்தில் பார்க்கப் படுவதில்லை. வெள்ளையனுக்கு வால் பிடித்த கட்சி, சுதந்தரத்துக்கு எதிரான கட்சி, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதுவும் செய்யவில்லை, பெண்களை இழிவாக நினைக்கும் கட்சி என்பன போன்ற புளித்துப்போன புரட்டுகளுக்குப் பதிலளிப்பதைக் காட்டிலும் நீதிக்கட்சி இங்கே ஏற்படுத்தியிருக்கும் தாக்கம் குறித்துப் பேசுவது சரியாக இருக்கும். குறிப்பாக, இது நீதிக்கட்சியால் அமலுக்கு...