‘மதவாத பார்ப்பன பண்பாட்டை அழிக்கத் துடிக்கிறோம்’ – கன்யா குமார்
தேசத்துரோக வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஜவகர்லால் நேரு பல்கலைக் கழக மாணவர் கன்யா குமார் மாணவர்களிடையே ஆற்றிய உரையின் தமிழாக்கம்: எங்களுக்கு தேசபக்திக்கான சான்றிதழ் ஆர்.எஸ்.எஸ். ஸிடமிருந்து வேண்டாம். 80 விழுக்காட்டிற்கும் மேல் ஏழைகள் வசிக்கும் இந்த நாட்டில், நாங்கள் ஏழைகள் நலனுக்காகவே உழைப்போம். அதுவே எங்களின் தேசபக்தியாகும். எங்களுக்கு பாபாசாகேப் அம்பேத்கர் மீது முழுமையான நம்பிக்கை இருக்கிறது. இந்த நாட்டின் அரசியல் சட்டத்தின் மீது நம்பிக்கை கொண்டுள் ளோம். இந்த அரசியலமைப்பின் மீது யாராவது விரல் நீட்டினால், அது சங்பரிவாரத்தின் விரலோ அல்லது வேறு எவருடைய விரலோ. அந்த விரலை நாங்கள் ஒருபோதும் சகித்துக் கொள்ள மாட்டோம். ஆனால், ஜண்டேவாலாவிலும், நாக்பூரிலும் கற்பிக்கப் படும் சாசனத்தின் மீது எங்களுக்கு துளியளவும் நம்பிக்கை யில்லை. எங்களுக்கு மனுஸ்மிருதியின் மீது எவ்வித நம்பிக்கையுமில்லை. இந்த நாட்டிலுள்ள சாதியவாதத்தின் மீது எங்களுக்கு நம்பிக்கையில்லை. அண்ணல் அம்பேத்கர்தான் அரசியல் சாசன உரிமைகளை நிலை நாட்ட வேண்டும்...