Tagged: மக்கள் சந்திப்பு இயக்கம்
திராவிடர் விடுதலைக் கழகம் நடத்தும் ‘மக்கள் சந்திப்பு இயக்கம்’ திராவிடர் விடுதலைக் கழகம், ‘மக்கள் சந்திப்பு இயக்கம்’ என்ற இயக்கத்தைத் தொடங்குகிறது. இத்திட்டத்தின்படி உழைக்கும் மக்களை, மாணவர்களை, பெண்களை, ஆதரவாளர்களை, தோழர்களை சந்தித்து ஒவ்வொருவரிடமும் ரூ.10 நன்கொடைகளைத் திரட்ட வேண்டும். இப்படி 10 ரூபாய் நிதி திரட்டும் இயக்கத்துக்கு ஒவ்வொரு தோழருக்கும் நிர்ணயிக்கப்பட்ட இலக்கு ரூ.10,000/-. நிதி திரட்டுவதோடு ஒவ்வொரு தோழரும் 5 புதிய தோழர்களை இயக்கத்துக்குக் கொண்டுவர வேண்டும். ‘நண்பர்களை தோழர்களாக்குவோம்; தோழர்களை இயக்கமாக்குவோம்’ என்ற குறிக்கோளோடு 10 ரூபாய் நிதி சேர்ப்புத் திட்டம் தொடங்குகிறது. இதற்கான நன்கொடை சீட்டுகள் அச்சிடப்பட்டுள்ளன. கழகத்தின் பொருளாளர் இரத்தினசாமி அவர்களுடன் தோழர்கள் தொடர்புகொண்டு இதற்கான நன்கொடை ரசீதுகள் மற்றும் ஆலோசனைகளைப் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். சேலம் சிறையில் உள்ள நமது கழகத் தலைவர் கொளத்தூர் மணி, இத் திட்டத்தில் தோழர்கள் முனைப்போடு களமிறங்க வேண்டும் என்ற வேண்டுகோளை முன் வைத்துள்ளார். தோழமை அமைப்புகளின்...
திராவிடர் விடுதலைக் கழகத் தோழர்கள், மக்கள் சந்திப்புத் திட்டத்தின் கீழ் முனைப்போடு மக்களை சந்தித்து, கழகத்தின் செயல்பாடுகளை விளக்கும் துண்டறிக்கைகளை வழங்கி, 10 ரூபாய் நன்கொடை திரட்டும் இயக்கத்தை நடத்தி வருகிறார்கள். ஈரோட்டில் தோழர் சிவானந்தம் 600க்கும் அதிகமான மக்களை சந்தித்துள்ளார். மக்கள் ஆதரவு தருவதாகவும், கொடுக்கப்பட்ட இலக்கைவிட அதிகமாக மக்களை சந்திப்போம் என்றும் தெரிவித்துள்ளார். முதல் தவணையாக ரூ.5000, பொருளாளரிடம் கொடுத்துள்ளார். பவானியில் தோழர் வேல்முருகன், மக்கள் சந்திப்பு இயக்கத்தை தொடர்ச்சியாக செய்து வருகின்றார். தி.க. தலைவர் வீரமணி தாக்கப்பட்டபோது, கண்டனம் தெரிவித்த திராவிடர் விடுதலைக் கழகத்தின் அணுகுமுறையை பாராட்டியதோடு உண்மையான பெரியாரியக்கம் என தெரிவித்து தோழர்கள் நன்கொடை அளித்தனர். கோபி கோட்டாம்பாளைய தோழர் கார்த்திக், திருப்பூர் பேருந்து நிலையத்தில் 1 மணி நேரத்தில் 100 பேரை சந்தித்து முடித்தார். மேலும் நன்கொடை ரசீது புத்தகம் கேட்டு பொறுப்பாளர்களிடம் தொலைபேசியில் பேசினார். திருவாரூரில் காளிதாஸ், செந்தமிழன், முருகன் ஆகிய தோழர்கள்...
ஊர்தோறும் சென்று மக்களை சந்தித்து கழகத்தின் செயல்பாடுகளை விளக்கிடும் துண்டறிக்கைகளை வழங்கி பெரியார் கொள்கைகளை விளக்கிடும் மக்கள் சந்திப்பு இயக்கத்தை திராவிடர் விடுதலைக் கழகம் தொடர்ந்து நடத்தி வருகிறது. கழகத்தின் பரப்புரைக்காக வாங்கப்பட்டுள்ள ‘வேனில்’ தோழர்கள் இந்தப் பயணத்தை மேற்கொண்டு வருகிறார்கள். வாகனத்திலேயே உணவுப் பொருள்களை எடுத்துப்போய் ஆங்காங்கே உணவு தயாரித்து சாப்பிட்டு, வாகனத்திலேயே தங்கி, தொடர்ந்து தோழர்கள் உற்சாகமாக பணியாற்றி வருகிறார்கள். கழகப் பொருளாளர் இரத்தின சாமி, இந்த இயக்கத்துக்கு தலைமை யேற்று திட்டமிட்டு வழி நடத்தி வருகிறார். சந்திக்கும் மக்களிடம் ரூ.10 மட்டுமே நன்கொடையாக வாங்கும் இந்தத் திட்டத்தில் பொது மக்கள் ஆர்வத்துடன் நன்கொடை வழங்குவதோடு கழக வெளியீடுகளையும் வாங்கி வருகிறார்கள். வெற்றி நடைபோடும் மக்க சந்திப்பு திட்டம் பற்றிய செய்தி தொகுப்பு: மே 22, 2014 : திராவிடர் விடுதலைக் கழகத்தின் மக்கள் சந்திப்பு இயக்கத்தை, கரூரில் 22.5.2014 காலை 11 மணிக்கு மூத்த பெரியார் தொண்டர்...
இரண்டாம் கட்ட மக்கள் சந்திப்பு இயக்கம், ஜூன் 10 ஆம் தேதி பகல் 11 மணியளவில் கோவை காந்திபுரத்தில் தொடங்கியது. கழகப் பொருளாளர் இரத்தினசாமி, செயலவைத் தலைவர் துரைசாமி, மாவட்ட தலைவர் நேரு உள்ளிட்ட 20 தோழர்கள் இயக்கத்தில் பங்கேற்றனர். கோவை நகரம் முழுதும் மக்களை சந்தித்து துண்டறிக்கைகளை வழங்கி, கழக நூல்களை விற்பனை செய்து வருகின்றனர். கழகத்தின் முயற்சியை பொது மக்கள் பெரிதும் பாராட்டி வரவேற்று வருகிறார்கள். ஒவ்வொருவரிடமும் 10 ரூபாய் என்று நன்கொடை திரட்டப்படுகிறது. 100 ரூபாய் நன்கொடை தருவோருக்கு 20 ரூபாய்க்கான நூல்கள் வழங்கப்படுகின்றன. ஜூலை 4 ஆம் தேதி வரை மக்கள் சந்திப்பு இயக்கம் தொடருகிறது. 4 ஆம் தேதி மேட்டுப் பாளையத்தில் நிறைவு பொதுக் கூட்டம் நடைபெறுகிறது. 15.6.2014 அன்று கழகத் தலைவர் கொளத்தூர் மணி, தோழர்களை உக்கடம்பகுதியில் சந்தித்துப் பாராட்டுகளைத் தெரிவித்தார். அன்று மாலை கோவையில் நடந்த மறைந்த நடிகர் மணிவண்ணன் நூல்...