மதத்தை அரசியலாக்காதே; மக்கள் ஒற்றுமையை சீர்குலைக்காதே! பெரியார் கைத்தடி ஊர்வலம்
பதட்டத்தை உருவாக்கக்கூடிய விநாயகன் சிலை ஊர்வலம் என்பது மத ஊர்வலம் அல்ல; மதத்தின் பெயரால் நிகழும் அரசியல் ஊர்வலம். சென்னை நகரில் ‘மிலாது நபி’ ஊர்வலம் இஸ்லாமிய அமைப்புகள் நீண்டகாலம் நடத்தி வந்தன. அமைதியாக மக்களுக்கு எந்த இடையூறும் இன்றி அந்த ஊர்வலம் ஆண்டுதோறும் நடந்து வந்தது. இதற்குப் போட்டியாக மதவாத அரசியல் சக்திகள் ‘விநாயகன்’ சிலை ஊர்வலத்தை அதற்குப் பிறகுதான் தொடங்கின. தி.மு.க. ஆட்சி காலத்தில் இந்த ஊர்வலங்களால் பதட்டம் உருவாக்கப்படுவதைத் தவிர்க்க இரண்டு ஊர்வலங்களையும் தவிர்த்துவிடுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆட்சியின் கோரிக்கையையேற்று, இஸ்லாமியர் அமைப்புகள் மீலாது நபி ஊர்வலத்தைக் கைவிடுவதாக அறிவித்தன. அது முதல், நபிகள் நாயகம் பேரணி, சென்னையில் நடக்கவில்லை. ஆனால், விநாயகன் ஊர்வலத்தை கைவிட மதவாத அரசியல்வாதிகள் மறுத்து விட்டனர். 1996இல் பெரியார் திராவிடர் கழகம் விநாயகன் அரசியல் ஊர்வலத்துக்கு எதிராக பெரியார் சிலை ஊர்வலம் நடக்கும் என அறிவித்தது. தி.மு.க. ஆட்சி, இரு ஊர்வலங்களுக்கும்...