‘மகாமக’த்தில் முழுக்குப் போடுவது மதிகேடு!
71 ஆண்டுகளுக்கு முன் பெரியார் எழுதிய கட்டுரை ‘மகாமக’த்தில் முழுக்குப் போடுவது மதிகேடு! 1945ஆம் ஆண்டு ‘குடிஅரசு’ இதழில் கும்பகோணம் ‘மகாமகம்’ குறித்து பெரியார் எழுதிய கட்டுரை இது. 71 ஆண்டுகளுக்கு முன்பு எழுதிய கருத்துகள் இன்றைக்கும் பொருந்தி வருவதை இக்கட்டுரையைப் படிக்கும்போது புரிந்துணர முடியும். கும்பகோணத்தில் மகாமக உற்சவம் நடக்கப் போகிறது. அதற்குத் திராவிட மக்களை வரும்படியாக, கும்பகோணம் பார்ப்பனர்களால் அழைப்புக்குமேல் அழைப்பு விடுத்த வண்ணமாக விளம்பரங்கள் காணப்படுகின்றன. பார்ப்பனப் பத்திரிகைகள் மாமாங்கத்தைப் பற்றிப் பிரமாதப்படுத்தி மக்களை அங்குச் சேர்ப்பிக்க – தள்ளிவிட முயற்சிக்கின்றன. இந்த 20 ஆவது நூற்றாண்டுக்குப் பக்கத்தில் வாழும் திராவிட மக்கள் இப்படி ஓர் அறிவும், மானமும் சூன்யமான ஓர் உற்சவத்தை மதித்து, கும்பகோணம் சென்று கூமட்டைகள் ஆவதென்றால், இதை உலகின் 8ஆவது அதிசயமென்றுதான் சொல்ல வேண்டும். கும்பகோணத்தில் இவ்வளவு கூட்டம் சேர்க்கப்படுவதற்கு மாமாங்கத்தன்று அங்கு என்ன புதிய சங்கதி காணப்படப் போகிறது என்பதை யோசிப்போம்....