Tagged: பெரியார் முழக்கம் 23012014 இதழ்

என் ஒரே தலைவர் பெரியார் தான் : நடிகவேள் எம்.ஆர்.ராதா

என் ஒரே தலைவர் பெரியார் தான் : நடிகவேள் எம்.ஆர்.ராதா

தமிழ்த் திரைப்பட உலகில் ஏராளமான திரைப்படங்களுக்கு கதை வசனம் எழுதி புகழ் பெற்ற ஆரூர் தாஸ், ‘தினத்தந்தி’ நாளேட்டில் தனது கலை உலக அனுபவங்களை தொடராக எழுதி வருகிறார். அதில் நடிகவேள் எம்.ஆர். ராதாவுக்கும் தனக்கும் நிகழ்ந்த உரையாடலை (4.1.2014) பதிவு செய்துள்ளார். பெரியார் மீது நடிகவேள் எவ்வளவு உறுதியான பற்றுக் கொண்டிருந்தார் என்பதை  நடிகவேளே விளக்கும் பகுதி இது. ஒரு காலத்துல நடிகர்கள் எல்லாரும் ஒரே குடும்பமா ஒண்ணா, தான் இருந்தோம். இடையில இந்த அரசியல் – கட்சி – அது இதுன்னு வந்து நடிகன்களைப் பிரிச்சி ஒற்றுமை இல்லாமல் ஆக்கித் தனித்தனியா பண்ணிடுச்சி. எம்.கே. தியாகராஜ பாகவதரும், பி.யு.சின்னப்பாவும் சினிமாவுல ஓகோன்னு இருந்த அந்தக் காலத்துல அரசியலும் சினிமாவும் ஒண்ணுக்கொண்ணு சம்பந்தமே இல்லாம தனித்தனியா இருந்துச்சு. அவுங்கவுங்க அவுங்கவுங்க வேலையை பாத்தாங்க. நாட்டை அரசியல்வாதிங்க கவனிச்சிட்டாங்க. கலையை நடிகருங்க, மத்தக் கலைஞருங்க பார்த்துக்கிட்டாங்க. அதனால்தான் அப்போ எந்தப் பிரச்சினையும்...

உச்சநீதிமன்றத்தின் மீது பழி போட்டு தப்பிக்கும், ஜெயலலிதா

உச்சநீதிமன்றத்தின் மீது பழி போட்டு தப்பிக்கும், ஜெயலலிதா

‘சூப்பர் ஸ்பெஷாலிட்டி’ மருத்துவமனை இடஒதுக்கீடு குறித்து தி.மு.க. தலைவர் கலைஞர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கை: சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் கட்டப்பட்டு வரும் சூப்பர் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைக்கான மருத்துவர் நியமனத்தில் இடஒதுக்கீடு பின்பற்றப்படாததற்கு உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புதான் காரணம் என்று முதல்வர் ஜெயலலிதா கூறியிருக்கிறார். ஆனால், உச்சநீதிமன்றம், இட ஒதுக்கீட்டை பின்பற்றுவது மத்திய அரசின் முடிவாகும் என்று திட்டவட்டமாகத்  தனது தீர்ப்பில் தெரிவித்துவிட்டது. எனவே, தமிழகத்தில் உச்சநீதிமன்றத் தீர்ப்புக் காரணமாகத்தான், இடஒதுக்கீடு பின்பற்றப்படவில்லை என்று ஜெயலலிதா கூறியிருக்கும் காரணம், மக்களை ஏமாற்றுவதற்கும், சமூக நீதியைக் குழிதோண்டி புதைப்பதற்குமான ஒன்றே தவிர வேறல்ல. உச்சநீதிமன்றம் 18.7.2013 அன்று தீர்ப்பளித்த பிறகு, ஜூலை 31 ஆம் தேதி புதுவை ஜிப்மர் மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரியில் 114 மருத்துவ அதிகாரிகளைத் தேர்ந்தெடுப்பதற்கான அறிவிப்பு வெளி வந்தது. அப்போது உச்சநீதிமன்றத் தீர்ப்பைக் காரணம் காட்டி இடஒதுக்கீடு கிடையாது என்று மத்திய அரசு கூறவில்லை. இடஒதுக்கீட்டின்படி பிற்படுத்தப்பட்டோருக்கும்,...

நீதிமன்றங்கள் அளித்த தீர்ப்புகள் என்ன? : கோயில் பார்ப்பனர்களின் உடைமையா?

நீதிமன்றங்கள் அளித்த தீர்ப்புகள் என்ன? : கோயில் பார்ப்பனர்களின் உடைமையா?

கோயில்களின் நிர்வாகத்தில் தலையிடும் உரிமை அரசுக்கு உண்டு என்பதை வலியுறுத்தி, கடந்த காலங்களில் நீதிமன்றங்கள் தீர்ப்பளித்து வந்துள்ளன. தீட்சதர்கள் – இந்து மதத்துக்குள்ளேயே தனிப் பிரிவினர். இவர்களின் உரிமைகளை அரசி யலமைப்புச் சட்டத்தின் 26 பிரிவு உறுதி செய்கிறது. எனவே, தீட்சதர்கள், தில்லை நடராசன் கோயிலை நிர்வகிக்கும் உரிமையில் அரசு தலையிட முடியாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அரசியல் சட்டத்தின் 26 ஆவது பிரிவு, பார்ப்பனர்களுக்கான பாதுகாப்பு ஆயுதமாக இருந்து வருகிறது. பெரியார் நடத்திய அரசியல் சட்ட எரிப்புப் போராட்டத்தில் எரிக்கப்பட்ட பிரிவுகளில் இதுவும் ஒன்று. சமணர்கள் தனிப் பிரிவாக இருந்தாலும்கூட, சமணக் கோயில்கள், இந்து சட்டத்தின் கீழ்தான் நிர்வகிக்கப் பட்டு வருகின்றன. இதை நீதிமன்றமும் ஏற்றுக் கொண்டுள்ளது. தீட்சதப் பார்ப்பனர்கள் ‘முன் குடுமி’ ஒன்றைத் தவிர, ஏனைய ஸ்மார்த்தப் பார்ப்பனர்களைப் போன்ற கலாச்சாரத்தையே பின்பற்றுகின்றனர். தீட்சதப் பார்ப்பனர்கள் பூணூல் அணிந்து, தங்களை “பிராமணர்கள்” என்றுதான் அறிவித்துக் கொள்கிறார்கள். கோயிலுக்குள் ‘ஓதுவார்’...

திராவிடர் கழகம் வரலாற்றை திரிக்க வேண்டாம்!

திராவிடர் கழகம் வரலாற்றை திரிக்க வேண்டாம்!

பெரியார் – தமிழ்நாடு தனி நாடாக வேண்டும் என்று கூறியது குறித்து வாசகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு தி.க. தலைவர் கி.வீரமணி ‘உண்மை’ இதழில் (ஜன.1-15) கீழ்க்கண்ட பதிலை அளித்துள்ளார். “சமூக இழிவு ஒழிப்பு மாநாடுதான் அவர் கடைசியாக நடத்தியது; பேசியது. அதற்காக விடுத்த அறிக்கையில் ‘நானே பிரிவினை கேட்கவில்லையே!’ என்று அறிக்கையை விடுத்தார். அது விடுதலை நாளிதழில் வெளி வந்துள்ளது. ‘விடுதலை’க்கான தேவை அவசியம் வேறு – கழகம் விடுதலை கேட்டது என்ற நிலை வேறு’ என்று பதிலளித்துள்ளார். பெரியார் தமிழ்நாடு தனிநாடாக பிரிய வேண்டும் என்று வலியுறுத்தியது உண்மை. தி.க. தலைவர், அதை ஏற்கிறாரா? இல்லையா என்பது, அவரது கொள்கை. அதற்காக பெரியார் கருத்தை மறைக்க முயல்வது வரலாற்றுத் துரோகம். தி.க. தலைவர் கூறுவதுபோல் பெரியார் கடைசியாக பேசியது சமூக இழிவு ஒழிப்பு மாநாடு அல்ல. பெரியார் சமூக இழிவு ஒழிப்பு மாநாடு நடத்தியது 1973 டிசம்பர் 8,...

அடைக்கலம் தேடி வந்த தமிழர்களை இலங்கைக்கு அனுப்பும் ஆஸ்திரேலியாவுக்கு கண்டனம்

அடைக்கலம் தேடி வந்த தமிழர்களை இலங்கைக்கு அனுப்பும் ஆஸ்திரேலியாவுக்கு கண்டனம்

அடைக்கலம் தேடி வந்த ஈழத் தமிழர்களை அகதிகளாக அங்கீகரிக்காமல், அவர்களை மீண்டும் இலங்கைக்கே திருப்பி அனுப்பி வருகிறது ஆஸ்திரேலிய அரசு. உயிருக்கு உறுதியில்லாமல் ஈழத் தமிழர்கள் அச்சத்தால் பரிதவிக்கிறார்கள். அடைக் கலம் தேடி ஆஸ்திரேலியா வந்த 46 தமிழர்களை சிறையிலடைத்துள்ள ஆஸ்திரேலிய அரசு, இப்போது, அவர்களை இலங்கைக்கு திருப்பி அனுப்ப ஏற்பாடுகளை செய்து வருகிறது. இந்திய அரசு, இதில் தலையிட்டு தடுத்து நிறுத்த வேண்டும் என்று உலகம் முழுதும் தமிழர்கள் வற்புறுத்தி வருகிறார்கள். இந்த ஈழத் தமிழர்கள் 5 ஆண்டுகளாக ஆஸ்திரேலிய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். சிறையில் அடைபட்டுள்ள ஈழத் தமிழர்கள் மன உளைச்சலுக்கு உள்ளாகி, கடுமையாக உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளனர். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, ஒருவர் சிறையிலேயே தற்கொலை செய்து கொண்டார். சிலர் மனைவி, குழந்தைகளுடன் நான்கு ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட் டுள்ளனர். கொழும்பில் நடந்த காமன்வெல்த் மாநாட்டில் இராஜபக்சேவை தீவிரமாக ஆதரித்துப் பேசிவர் ஆஸ்திரேலிய பிரதமர் என்பது குறிப்பிடத்தக்கது. சில சூழ்நிலைகளில்...

உன் இயக்கம் ஒரு வரலாறு : தமிழேந்தி

உன் இயக்கம் ஒரு வரலாறு : தமிழேந்தி

வறட்டுத்தன மாய்இங்கே நாத்தி கத்தை வளர்த்திட்டாய் என்றுசிலர் குற்றம் சொல்வார் முரட்டுத்தன மாய்க்கடவுள் மறுத்தாய் என்றும் முணுமுணுப்பார் உள்ளுக்குள்; ஆனால் நீயோ திருட்டுத்தனம் மிக்க பார்ப்ப னீயத் தீமைகளை, சாதியத்தை எதிர்த்தாய் என்றே அருட்தந்தை போல்உன்னைத் தமிழகத்தின் அடித்தட்டு மக்களெலாம் வணக்கம் செய்தார். ‘புதிதாக நீஎதையும் சொல்ல வில்லை புரட்சிகர செயல்எதுவும் செய்ய வில்லை இதற்கு முன்பே இருந்தவைதாம்; உன்பங் கென்றே எதுவுமில்லை’ என்பர்சிலர்! எல்லாம் இங்கே விதிவசந்தான் எனக்கிடந்த மக்கள் நெஞ்சில் விசையூட்டித் தன்மான வீரம் ஊட்டி நதிப்பெருக்காய், கடல்ஆர்ப்பாய் ஓர் இயக்கம் நடத்தியவன் வரலாற்றில் நீயே அன்றோ? ‘தமிழ்மொழியைச் சனியனென்றாய், தமிழைக் காட்டு மிராண்டிமொழி எனச்சொன்னாய்’ என்றே உன்னைத் தமிழ்மொழிக்குப் பகைவனெனக் குற்றம் சாட்டிச் சலிக்காமல் பழிஉரைப்பார்; இந்தி யாலே தமிழ்மொழிக்(கு) உற்றகேட்டைத் தடுத்த துண்டு தமிழ்உணர்ச்சி உன்இயக்கம் வளர்த்த துண்டு தமிழ்மொழிக்குள் ‘நன்றி’என்ற சொல்லும் உண்டு தமிழர்அதன் ‘பொருள்’அறியும் பண்பும் உண்டு ‘ஆடுமாடா மேய்த்திருப்பான் தமிழன்? இல்லை...

பன்னீர்செல்வமே! காலம் சென்று விட்டாயா? : பெரியார் (பன்னீர்செல்வம் முடிவுக்கு எழுதிய இரங்கல்)

பன்னீர்செல்வமே! காலம் சென்று விட்டாயா? : பெரியார் (பன்னீர்செல்வம் முடிவுக்கு எழுதிய இரங்கல்)

நமது உண்மைத் தோழரும், உற்ற துணைவரும், உள்ளும் புறமும் ஒன்றாய் உள்ளவரும், தமிழர் இயக்கத்தில் உறுதியான பற்றுக் கொண்டு அல்லும் பகலும் உழைத்து வந்தவரும், நம்மிடத்தில் களங்கமற்ற அன்பும் பற்றுதலும் விசுவாசமும் கொண்டிருந்தவரும், நினைத்தால் திடுக்கிடும்படி எதிரிகள் நெஞ்சில் எப்பொழுதும் திகிலை உண்டாக்கிக் கொண்டிருந்தவருமான அருமை பன்னீர் செல்வம் அவர்களை, இன்று, காலம் சென்ற பன்னீர் செல்வம் என்று எழுத நேரிட்டதற்கு மனம் பதைக்கிறது! நெஞ்சு திக்கு திக்கென்று அடித்துக் கொள்கிறது! மெய் நடுங்குகிறது! எழுதக் கையோடவில்லை; கண் கலங்கி மறைக்கிறது; கண்ணீர் எழுத்துக்களை அழிக்கிறது! பன்னீர்செல்வத்திற்குப் பாழும் உத்தி யோகம் வந்ததும் போதும்; அது அவரது உயிருக்கே உலையாய் இருந்ததும் போதும்! தமிழர்களைப் பரிதவிக்கவிட்டுவிட்டு மறைந்து விட்டார். இந்த உத்தியோகம் ஏன் வந்ததென்றே ஒவ்வொரு வினாடியும் தோன்றுகிறது. அவருக்கடுத்தாற்போல் – யார், யார் என்று மனம் ஏங்குகிறது; தேடுகிறது; தேடித் தேடி ஏமாற்றமடைகிறது! என் மனைவி முடிவெய்தியபோதும் நான் சிறிதும்...

வினாக்கள்… விடைகள்…!

வினாக்கள்… விடைகள்…!

தேர்தலை தன்னம்பிக்கையுடன் எதிர்கொள்ள வேண்டும்; அதீத நம்பிக்கையுடன் இருக்கக் கூடாது.    -மோடிக்கு அத்வானி அறிவுரை ஆமாம்! ‘ராமபிரான்’ அனுமார் படையுடன் வெற்றியை காலடியில் கொண்டுவந்து சேர்த்து விடுவான் என்று அதீதமாய் நம்பி ஏமாறக் கூடாது; சரிதானே! மோடி – பிரதமராகவே முடியாது. தேனீர் வேண்டு மானால் விற்கலாம்.  – மணி சங்கர் அய்யர் அவர் தேனீர் விற்கட்டும்; நாட்டை நாங்கள்தான் விற்கவேண்டும் என்கிறீர்களா? “என்னை தீவிரவாதிகள் கடத்தப் போகிறார்கள் என்றும், ஊடகங்களுக்கு இதைக் கூற வேண்டாம்” என்றும் கூறிவிட்டு, உளவுத் துறையே ஊடகங் களுக்கு செய்தி கொடுத்துவிட்டது.   – கெஜ்ரிவால் ஆமாம்! தீவிரவாதிகள் உளவுத் துறைக்கு தகவல் தருவார்கள். உளவுத் துறை பத்திரிகைகளுக்கு தகவல் தரும். உறவு முறையில் திருமணம் செய்வதால்தான் காது கோளாறுகள் ஏற்படுகின்றன.    – ‘தினமணி’ செய்தி ஜாதி வெறி பேசும்  தலைவர்களே, காதில் விழுகிறதா? மத்திய  அரசைக் கண்டித்து, ரிசர்வ் வங்கி முன் விவசாயிகள் சட்டை அணியாமல் ‘நாமம்’...