Tagged: பெரியார் முழக்கம் 10102013 இதழ்

அரசு அலுவலகங்கள், காவல் நிலையங்களில் ஆயுத பூஜை போடுவதை நிறுத்துக! அக்.7 இல் கழகம் ஆர்ப்பாட்டம்

அரசு அலுவலகங்கள், காவல் நிலையங்களில் ஆயுத பூஜை போடுவதை நிறுத்துக! அக்.7 இல் கழகம் ஆர்ப்பாட்டம்

மதச் சார்பற்ற நாட்டில் மத நிகழ்வுகளுக்கு அரசு அலுவலகங்களில் இடமிருக்கக் கூடாது. ஆனால், அரசு அலுவலகங்களிலும் குறிப்பாக காவல் நிலையங்களில் ஆயுத பூஜை கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. அரசு அலுவலகங்களில் கடவுள் படங்களை மாட்டக் கூடாது என்று அண்ணா முதல்வரானவுடன் தி.மு.க. ஆட்சியில் அரசு ஆணை பிறப்பிக்கப்பட்டது. அந்த ஆணைகள் மீறப்பட்டு, கடவுள் படங்கள், பூஜைகள் நடந்து வருகின்றன. பல்வேறு மதத்தினரும், மதத்தில் நம்பிக்கை இல்லாதவர்களும் பணியாற்றும் அலுவலகங்கள், கோயில்களாகவோ பஜனை மடங்களாகவோ மாற்றப்படக் கூடாது. இந்த நிகழ்வுகள் மத அடிப்படையில் தேர்தலில் போட்டியிடும் பா.ஜ.க. போன்ற கட்சிகளின் பரப்புரைக்கு மறைமுக வழியமைக்கும் ஆபத்தும் அடங்கியுள்ளன. எனவே, அரசு அலுவலகங்களில் ஆயுத பூஜைகள் கொண்டாட் டத்தை நடத்த அரசு அனுமதிக்கக் கூடாது என்று வலியுறுத்தி,அக்டோபர் 7 ஆம் தேதி திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் ஆர்ப்பாட்டங்கள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. கழகத் தோழர்கள் ஆர்ப்பாட்டங்களுக்கு தயாராகுமாறு கேட்டுக் கொள்கிறோம்.   – தலைமைக் கழகம்...

தூத்துக்குடி மாவட்டத்தில் பெரியார் பிறந்த நாள்

தூத்துக்குடி மாவட்டத்தில் பெரியார் பிறந்த நாள்

தூத்துக்குடி மாவட்ட கழக சார்பில் பெரியார் 135 ஆவது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. 17.9.2013 காலை 9.30 மணி அளவில் பெரியார் சிலைக்கு பால்துரை மாலை அணிவித்தார். பரப்புரைச் செயலாளர் பால். பிரபாகரன், மாவட்டத் தலைவர் பொறிஞர் சி. அம்புரோசு, செயலாளர் மதன், பொருளாளர் இரவி சங்கர், துணைத் தலைவர் வே.பால்ராசு, துணைச் செயலாளர் பாலசுப்பிரமணியன், மாநகர கழகச் செயலாளர் பால். அறிவழகன், செல்லத்துரை மற்றும் ஏராளமான கழகத்தினரும், ஆதித் தமிழர் பேரவைத் தோழர்களும் கலந்து கொண்டு, கடவுள் மறுப்பு, சாதி மறுப்பு முழக்கமிட்டனர். வடக்கு கோட்டையன் தோப்பில் கழகக் கொடியை பிரபாகரன் ஏற்றினார். ஏராளமான தோழர்களும் பொது மக்களும் கலந்து கொண்டனர். முக்காணியில் திருவைகுண்டம் ஒன்றிய அமைப்பாளர் தே.சந்தனராசு கழகக் கொடியேற்றி இனிப்பு வழங்கினார். பெரியார் முழக்கம் 10102013 இதழ்  

பெண்களே உடலைச் சுமந்து இடுகாடு சென்றனர்: கொளத்தூர் மணி தாயார் முடிவெய்தினார்

பெண்களே உடலைச் சுமந்து இடுகாடு சென்றனர்: கொளத்தூர் மணி தாயார் முடிவெய்தினார்

திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, பழனிச்சாமி, சரோஜா ஆகியோரின் தாயார் கு. பாவாயம்மாள் 4.10.2013 அன்று முதிர்ந்த வயதில் முடிவெய்தினார். அவரது சொந்த கிராமமான உக்கம்பருத்திக்காட்டிலுள்ள அவரது இல்லத்தில் உடல் வைக்கப்பட்டிருந்தது. செய்தியறிந்து தமிழகம் முழுதுமிருந்தும் கழகத் தோழர்களும் ஆதரவாளர்களும் நண்பர்களும் ஏராளமாகத் திரண்டு வந்திருந்தனர். ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வை.கோ, சட்டமன்ற உறுப்பினர்கள் உ. தனியரசு, எஸ் .ஆர். பார்த்திபன் (தே.மு.தி.க.), தமிழக வாழ்வுரிமை கட்சி பொதுச் செயலாளர் வை.காவேரி, கவிஞர் அறிவுமதி, எழுத்தாளர் பாமரன், காஞ்சி மக்கள் மன்றத் தோழர்கள்  உள்ளிட்ட பல்வேறு கட்சிகள், இயக்கங்களைச் சார்ந்த தோழர்களும், அரசியல் கட்சிகளைச் சார்ந்த தோழர்களும், கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், பொருளாளர் ஈரோடு இரத்தினசாமி, பரப்புரைச் செயலாளர் பால். பிரபாகரன், தலைமை நிலையச் செயலாளர் தபசி. குமரன், வெளியீட்டு செயலாளர் சூலூர் தமிழ்ச் செல்வி, புதுவை மாநில கழகத் தலைவர் லோகு. அய்யப்பன், செயலாளர்...

அரசு அலுவலகங்களில் ஆயுத பூஜை தடை கோரி கோவையில் ஆர்ப்பாட்டம்

அரசு அலுவலகங்களில் ஆயுத பூஜை தடை கோரி கோவையில் ஆர்ப்பாட்டம்

7.10.2013 அன்று அரசு அலுவலகங்களில் மத வழிபாடுகளை தடை அமுல்படுத்தக் கோரி காந்திபுரம் தமிழ்நாடு உணவகம் முன்பு காலை 11 மணிக்கு கழகம் சார்பில் கோவையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநகர தலைவர் நா.பன்னீர்செல்வம் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பங்களித்த பொறுப்பாளர்கள் இனியன், நேரு தாஸ் , பால முரளி, அன்ரூஸ் , பாலகிருஷ்ணன், சூலூர் பன்னீர்செல்வம் உள்ளிட்ட 40 தோழர்கள் பங்கேற்றனர். மாவட்டத் தலைவர் வெள்ளமடை நாகராசு உரையாற்றினார். வெண்பா முதலாம் ஆண்டு பிறந்த நாள் கோவை மாநகர மாவட்டக் கழகத் தலைவர் வழக்கறிஞர் பன்னீர் செல்வம்–கிரிஜா இணையர் மகள் வெண்பாவின் முதலாமாண்டு பிறந்த நாள் (7.10.2013 அன்று) மகிழ்வாக கழக ஏட்டுக்கு ரூ.1000 நன்கொடை வழங்கினர். நன்றியுடன் பெற்றுக் கொண்டோம். (ஆர்) பெரியார் முழக்கம் 10102013 இதழ்  

காமன்வெல்த் மாநாட்டை புறக்கணிக்கக்கோரி ஒரு லட்சம் பேரிடம் கையெழுத்து

காமன்வெல்த் மாநாட்டை புறக்கணிக்கக்கோரி ஒரு லட்சம் பேரிடம் கையெழுத்து

இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது என்பதை வலியுறுத்தி திராவிடர் விடுதலைக் கழகம், மன்னை ஒன்றிய ம.தி.மு.க.வும் இணைந்து ஒரு லட்சம் பேரிடம் கையெழுத்து வாங்கும் இயக்கம் மன்னார்குடியில் தொடங்கியது. தமிழர்களை இனபடுகொலை செய்த இலங்கையில் நடைபெறும் காமன் வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது. இலங்கையை காமன்வெல்த் நாடுகளின் பட்டியலில் இருந்து நீக்க வேண்டும். தமிழீழம் அமைவதற்கு பொது வாக்கெடுப்பு நடத்த ஆதரவு கொடுக்க வேண்டும். போர் குற்றவாளி இலங்கை அதிபர் ராஜபக்சேவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்தி உரிய தண்டனையை பெற்றுதர முயற்சி செய்ய வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி, திராவிடர் விடுதலைக் கழகம், மன்னை ஒன்றிய ம.தி.மு.க. தமிழன் சேவை மையம் ஆகிய அமைப்புகளின் சார்பில் கழக மாவட்ட அமைப்பாளர் காளிதாசு, ம.தி.மு.க. மன்னை ஒன்றிய செயலாளர் சேரன் குளம் செந்தில்குமார், தமிழன் சேவை மைய நிறுவனர் வாட்டார் கார்த்திகேயன் ஆகியோர் தலைமையில் திருவாரூரில்...

தி.க. தலைவரை தாக்க முயற்சி: கழகம் கண்டனம்

தி.க. தலைவரை தாக்க முயற்சி: கழகம் கண்டனம்

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்களை விருத்தாசலத்தில் ஜாதி மத வெறி சக்திகள் தாக்க முயன்றதை திராவிடர் விடுதலைக் கழகம் வன்மையாக கண்டிக்கிறது. தாக்குதலைக் கண்டித்து சென்னையில் கழக சார்பில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. பார்ப்பனிய சக்திகள், சில ஜாதி வெறியர்களை சேர்த்துக் கொண்டு மிரட்டிப் பார்க்க வேண்டாம். பெரியார் இயக்கங்கள் பல்வேறு பெயரில் இயங்கினாலும் பெரியார்  கொள்கை பரப்புதலுக்கு தடை என்று வந்தால் அதை சந்திக்க களமிறங்கும். இதை பார்ப்பன சக்திகள் புரிந்து கொள்ளட்டும்! பெரியார் முழக்கம் 10102013 இதழ்

கடவுள்-மதமற்ற புதிய உலகு வரட்டும்

கடவுள்-மதமற்ற புதிய உலகு வரட்டும்

‘இந்து’ ஆங்கில நாளேட்டில் (செப்.22) மராட்டியத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட பகுத்தறிவுப் போராளி தபோல்கர் நினைவாக  பேராசிரியர் வசந்த் நடராசன் எழுதிய கட்டுரையின் சுருக்கமான தமிழ் வடிவம். மனித சமுதாய வரலாற்றைப் படித்தால் மற்ற எந்த காரணத்தையும்விட மதத்தின் பேரால் நடந்த போர்களே அதிகம் என்பதைப் பார்க்க முடிகிறது. சரியாகச் சொன்னால், எந்ததெந்தக் காலகட்டங்களில் மதமும் அதன் மீதான கொள்கைப் பிடிவாதமும் தீவிரமாகக் கோலோச்சினவோ அந்தக் கால கட்டங்களில்தான் மனிதர்கள் மீது மிகக் குரூரமான சித்திரவதைகளும் நடைபெற்றன. உதாரணமாக, கத்தோலிக்க சர்ச்சோடு உடன்படாதவர்களைக் கொடுமைப்படுத்திய ஸ் பானிய விசாரணைகள் நடைபெற்ற காலத்தைக் கூறலாம். ஜெர்மனியில் யூதர்களுக்கு எதிராகத் தொடங்கி வளர்ந்த நாசிசம் இரண்டாம் உலகப் போரில் போய் முடிந்தது. இப்போது ‘இஸ் லாமிய தீவிரவாதம்’ தலை தூக்கியிருப்பது, சிலர் குறிப்பிடுவதுபோல் வெவ் வேறு கலாச்சாரங்களுக்கு இடையே நடக்கும் மோதல் அல்ல. இஸ் லாம் மதத்துக்கும், கிறிஸ் துவ மதத்துக்கும் இடையிலான மோதல்தான். அதன்...

கோவில் தங்கத்தை முடக்காதே: கழகத்தின் ஆர்ப்பாட்டங்கள்

கோவில் தங்கத்தை முடக்காதே: கழகத்தின் ஆர்ப்பாட்டங்கள்

தூத்துக்குடியில் நாட்டின் பொருளாதாரத்தை சீர் செய்திட கோயில்களில் முடங்கிக் கிடக்கும் தங்கத்தை பயன்படுத்த வலியுறுத்தி, தூத்துக்குடி மாவட்ட கழக சார்பில் 13.9.2013 அன்று பழைய மாநகராட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் பொறிஞர் சி.அம்புரோசு தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தை ஆதி தமிழர் பேரவை துணைப் பொதுச் செயலாளர் கண்ணன் தொடங்கி வைத்தார். நெல்லை மண்டலச் செயலாளர் கோ.அ.குமார், பரப்புரைச் செயலாளர் பால். பிரபாகரன் விளக்கவுரையாற்றினர். மாவட்டச் செயலாளர் மதன், பொருளாளர் இரவி சங்கர், துணைத் தலைவர் வே.பால்ராசு, துணைச் செயலாளர் பாலசுப்பிரமணியன், மாநகரத் தலைவர் பிரபாகரன், செயலாளர் பால். அறிவழகன் மற்றும் பல தோழர்களும், ஆதித் தமிழர் பேரவைத் தோழர்களும் கலந்து கொண்டனர். நாகர்கோயிலில் 13.9.2013 அன்று கழக சார்பில் கோயிலில் முடங்கிடும் தங்கத்தைப் பொருளாதார சீர்கேட்டை தடுப்பதற்குப் பயன்படுத்தக் கோரி நாகர்கோயிலில் ஆர்ப்பாட்டம் நடந்தது. பரப்புரை செயலாளர் பால்.பிரபாகரன் தலைமையில் நடந்த ஆர்ப்பாட் டத்தில் வழக்குரைஞர் வே.சதா...

மடத்துக் குளத்தில் பெரியார் பிறந்த நாள்

மடத்துக் குளத்தில் பெரியார் பிறந்த நாள்

22.9.2013 அன்று உடுமலை மடத்துக்குளம் வட்ட திராவிடர் விடுதலைக் கழகம் சார்பாக பெரியார் பிறந்த நாள் விழா, கொடியேற்று விழா மற்றும் தெருமுனைப் பிரச்சாரமாக நடைபெற்றது. விழாவிற்கு கழகச் செயலவைத் தலைவர் சு.துரைசாமி தலைமையேற்றும், தமிழ்நாடு அறிவியல் மன்ற திருப்பூர் மாவட்டப் பொறுப்பாளர் இரா. மோகன் முன்னிலையேற்றும் நடத்தி வைத்தனர். முதலில் பெதப்பம்பட்டியில் காலை 10 மணிக்கு கு.கவிதா கொடியேற்றினார். தொடர்ந்து நால்ரோட்டில் உடுமலை வட்ட அமைப்பாளர் ப. குணசேகரன், உடுமலை குட்டைத் திடலில் பெரியார் பிஞ்சு சு.ம. தேனிலா, சுடரொளி, உடுமலை பேருந்து நிலையத்தில் உடுமலை நகர அமைப்பாளர் மலரினியன், மடத்துக்குளம் நால் ரோட்டில் சூலூர் பன்னீர் செல்வம், மடத்துக்குளம் பேருந்து நிலையத்தில் முகில்ராசு, கடத்தூர் புதூரில் தமிழ்நாடு அறிவியல் மன்ற கோவை மாவட்ட பொறுப்பாளர் விஜயராகவன், கடத்தூரில் சு. துரைசாமி, காரத்தொழுவில் மாவட்டச் செயலர் அகிலன், கணியூரில் தம்பி பிரபா ஆகியோர் கொடி யேற்றினர். மாலை 3 மணிக்கு...

வினாக்கள்… விடைகள்…

வினாக்கள்… விடைகள்…

தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜுவுக்கு மதுரை மாநகராட்சி மரணச் சான்றிதழ் வழங்கியிருக்கிறது. இது குறித்து மேயர், ஆணையரிடம் அமைச்சர் விளக்கம் கேட்டுள்ளார்.            – செய்தி விளக்கம் அளிப்பதற்கு முன்பு, மேயரும் ஆணையரும் உயிருடன் இருப்பதற்கான சான்றிதழ்களை கையோடு எடுத்து வரச் சொல்லுங்கள்; கவனம்! நாட்டிலுள்ள ஏழைகள் நாணயமானவர்கள்; நம்பத் தகுந்தவர்கள்.        – ப. சிதம்பரம் ஆகவே நாணயமானவர்களை அதிகரிக்கச் செய்வோம்! அவர்கள் எண்ணிக்கை பெருகு வதற்கு நம்பத் தகுந்த ‘பட்ஜெட்’ போடுவோம்! இந்து கோயில்களை உண்மையான பக்தர்களிடம் ஒப்படைக்க வேண்டும்.                                                – இல. கணேசன் “இவர் உண்மையான பக்தர்தான்” என்று எந்தக் கடவுளாவது நற்சான்றிதழ் தர முன் வந்தால் பரிசீலிக்கலாம். காந்தியடிகள் சிலைக்கு இலவச மின்சாரம் அளிக்க விதிகளில் இடமில்லை.  – சேலம் மின்சார வாரியம் அறிவிப்பு நியாயம் தானே? காந்திக்கு என்ன ஓட்டா இருக்குது? எனக்கு இந்தி தெரியாது. ஆனால், திருச்சியில் மோடி பேசிய விதமும்...

தமிழருவி மணியன் கட்டுரைக்கு கழகத் தலைவர் கொளத்தூர் மணி மறுப்பு

தமிழருவி மணியன் கட்டுரைக்கு கழகத் தலைவர் கொளத்தூர் மணி மறுப்பு

தமிழ்நாட்டில் பா.ஜ.க., தே.மு.தி.க., ம.தி.மு.க. கூட்டணி உருவாக காய் நகர்த்தி வரும் காந்திய இயக்கத் தலைவர் தமிழருவி மணியன், மோடியை நியாயப்படுத்தி, ‘ஜூனியர் விகடன்’ ஏட்டில் எழுதிய கட்டுரைக்கு மறுப்புரையாக கழகத் தலைவர் கொளத்தூர் மணி ‘ஜீ.வி.’க்கு எழுதிய மறுப்பு இது. 9.10.2013 அன்று ‘ஜூனியர் விகடன்’ இதழில் ‘கதர் ஆடையில் காவிக் கறை எதற்கு?’ என்ற தலைப்பில் அந்த மறுப்பு வெளியிடப்பட்டுள்ளது. சிறு சிறு மாற்றங்களுடன் வெளியிடப்பட்டுள்ள அக்கட்டுரையின் முழுமையான வடிவத்தை ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ பதிவு செய்கிறது. இந்தியாவில் அடுத்து அமையப் போகும் ஆட்சி – அது எந்த ஆட்சியாக இருந்தாலும் மக்கள் பிரச்சினைகளை எல்லாம் தீர்த்துவிடப் போகிறது; ஊழலற்ற, நேர்மையான ஆட்சி ஒன்று மலரப் போகிறது என்கிற மாயைகளில் மூழ்கிட நாம் தயாராக இல்லை. தேர்தல் வழியாக மட்டுமே சமூக, பொருளாதார ஏற்றத் தாழ்வுகளை மாற்றி அமைத்துவிட முடியும் என்ற நம்பிக்கையும் நமக்கு இல்லை. ஆனால், “இந்தியாவின்...