Tagged: பெரியார் முழக்கம் 09012014 இதழ்
தமிழக முதல்வர் ஜெயலலிதா மீண்டும் ‘சித்திரை’ தான் தமிழ்ப் புத்தாண்டு என்று அறிவித்திருப்பது, அவரது பார்ப்பனிய இந்துத்துவ ஈடுபாட்டைத்தான் வெளிப்படுத்துகிறது. திராவிடர் விடுதலைக் கழகம் இந்த மாற்றத்தை வன்மையாக எதிர்க்கிறது. சித்திரை தான் தமிழ்ப் புத்தாண்டு என்பது அறிவியலுக்கு எதிரானது. தமிழர் கொண்டாடிய தை புத்தாண்டு, சித்திரைக்கு மாறியது எப்படி? குப்தர் வம்சத்தில் வந்த இரண்டாம் சந்திர குப்தன் தனது பெயரை விக்கிரமாதித் தன் என்று மாற்றிக் கொண்டு – தனது பெயரால் ‘விக்கிரம சகம்’ என்ற ஆண்டு முறையை உருவாக்கிக் கொண்டான். வானவியலை அறிவியல் கண்ணோட்டத்தில் ஆராய்ந்த ஆரியபட்டருக்கு எதிராக வானவியலில் – சாதகம், சோதிடத்தைப் புகுத்தும் முயற்சிகள் அவனது காலத்தில் மேற் கொள்ளப்பட்டன. எனவே வானியல் சிந்தனை யாளர் ஆரியபட்டர் புறக்கணிக்கப்பட்டு, பழமையில் ஊறியவரான மிகிரர் உயர்த்திப் பிடிக்கப்பட்டார். அப்படி விக்கிரமாதித்தன் உருவாக்கிய ‘விக்கிரம சகம்’ எனும் ஆண்டு முறையில் சித்திரை முதல் நாளே ஆண்டின் முதல் நாளாக்கப்பட்டது....
தில்லை தீட்சதர் கோயில் நிர்வாகத்தில் அரசு தலையிட முடியாது. – உச்சநீதிமன்றம் சரி; அப்படியானால், அரசு நிறுவனமான நீதிமன்றம் தலையிடு வதும், வழக்கை விசாரித்து, தீர்ப்பு வழங்குவதும் நியாயமா? திருநாவுக்கரசர், திருஞானசம் பந்தர், சுந்தரர், மாணிக்கவாசகர் போன்ற சைவக் குரவர்கள் பாடல் பெற்ற திருத்தலம் தில்லை. – செய்தி அது அந்தக் காலம். இப்போது தீட்சதர்கள் மட்டுமே பாடலாம்; ஓதுவார்கள் நுழைந்தால் அடி, உதை! பொது தீட்சதர்கள் சபைக்கு தலைவரே, தில்லை நடராசன் தான். – தீட்சதர்கள் வாதம் தலைவர் பதவி வேண்டாம்; பொரு ளாளர் பதவியைக் கொடுத்து விடுங்கள்; உண்டியல் பணம், நகைகள் திருட்டுப் போனால் தீட்சதர்களை நோக்கி எவனும் கேள்வி கேட்க முடியாது? அறநிலையத் துறை சட்டத்தின் கீழ் தில்லை நடராஜன் கோயில் வராது. – உச்சநீதிமன்றம் அதேபோல், இந்திய அரசியல் சட்டம், இந்திய கிரிமினல் சட்டத்தின் கீழ் தீட்சதர்களும் வர மாட்டார்கள் என்பதையும் இப்போதே உறுதி செய்து விடுங்கள். ஒரு வேளை...
ஆசிரியர்கள் தேர்வில் தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட வர்களுக்காக சமூக நீதியை புதை குழிக்கு அனுப்பிய அ.இ.அ.தி.மு.க. ஆட்சி இப்போது புதிய தலைமைச் செயலகக் கட்டிடத்தில் அமைக்க விருக்கும் உயர்தர மருத்துவமனை யின் மருத்துவருக்கான தேர்விலும் இட ஒதுக்கீட்டைப் புறக்கணித் துள்ளது வன்மையான கண்டனத் துக்கு உரியது. இதற்காக வெளியிடப்பட்ட அரசு அறிவிப்பில் மருத்துவர் தேர்வில் இடஒதுக்கீடு முறை மறுக்கப்பட் டுள்ளது. ‘சூப்பர் ஸ்பெஷாலிட்டி’ என்ற பெயரில் மருத்துவமனை தொடங்கப்படுவதால் இடஒதுக் கீட்டின் கீழ் தேர்வு செய்யப்படும் மருத்துவர்கள் இதற்கு தகுதியானவர் களாக மாட்டார்கள் என்று அரசு கருதுவது பார்ப்பனியக் கண் ணோட்டமேயாகும். இடஒதுக்கீடு தகுதி திறமைக்கு எதிரானது என்று பார்ப்பனர்கள் கூறும் கருத்தை ஜெயலலிதா ஆட்சியும் வழி மொழிகிறது. ‘சமூக நீதிகாத்த வீராங்கனை’ என்ற விருது பெற்ற முதல்வர் ஜெயலலிதா, இப்போது சமூக நீதியைப் புறக்கணிக்கும் வீராங்கனையாகி வருகிறாரா என்று கேட்க விரும்புகிறோம். இடஒதுக்கீட்டுக் கொள்கையை படிப்படியாகக் கைவிடுவதற்கான முயற்சியின் தொடக்கப் புள்ளி...
பிறந்த நாள்: 6.4.1927; பிறந்த இடம் : நாகப்பட்டினம்; தி.க.வில் சேர்ந்தபோது வயது 17. அப்போதிலிருந்து திருவாரூர் வாசம். ரத்தக் கண்ணீர் நாடகம் எழுதிய போது வயது 19. இளமையில் செய்யும் தவறுகள், முதுமையில் எப்படி வாட்டும் என்பதே கதைக் கரு. இராமாயண ஆராய்ச்சி செய்து, வால்மீகி இராமாயணம் தொடங்கி, வடமொழியிலுள்ள பல்வேறு இராமாயண கதைகளையும் ஆய்வு செய்து, மலையாள இராமாயணம், கம்பராமாயணம் உள்பட ஆய்ந்து தெளிந்து எழுதிய நூல் இராமாயணம். அரசாங்கம் இந்நூலை தடைசெய்தபோது எம்.ஆர்.இராதா ‘இராமாயணம்’ என்ற பெயரில் பட்டி தொட்டி எங்கும் இந்நாடகத்தை அரங்கேற்ற, பெரும் புரட்சி செய்த நாடகம் அது. இரத்தக் கண்ணீர், பெற்ற மனம், தங்கதுரை என்ற மூன்று படங்களுக்கு கதை, வசனம், திரைக்கதை எழுதியவர். இவரது பெரிய புராண ஆராய்ச்சி நூல் பல்வேறு பல்கலைக்கழகங்களில் முனைவர் பட்டத்திற்காக ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. வெளிநாட்டு பல்கலைக் கழகங்களில் இருந்தும் மாணவர்கள் வந்து இவருடன் உரையாடி...
பெரியார் கொள்கைகளை மேடைகளிலும் கலை வடிவங்களிலும் அரை நூற்றாண்டுக்கு மேலாக மக்களிடம் கொண்டு செல்வதையே தனது வாழ்வின் இலட்சியமாகக் கொண்டு செயல்பட்ட திருவாரூர் தங்கராசு 5.1.2014 பிற்பகல் 3.45 மணியளவில் சென்னை ராஜா அண்ணா மலைபுரத்திலுள்ள அவரது இல்லத்தில் முடிவெய்தினார். நோய்வாய்ப்பட்டு படுக்கையில் வீழாமல் மரணத்தை சந்திக்கும் வரை வழமையாகவே இருந்தார். குடும்பத் துடன் உரையாடிக் கொண்டிருந்தவர், கழிப்பறைக்குச் சென்றார். அங்கேயே சாய்ந்துவிட்டார். அவரது மரணமும் சுயமரியாதையுடனேயே நிகழ்ந்துவிட்டது. 6 ஆம் தேதி பிற்பகல் 3 மணியளவில் ராஜா அண்ணாமலைபுரத்திலிருந்த அவரது இல்லத்திலிருந்து பெரியார் இயக்கத் தோழர்கள் அணி வகுப்புடன் இறுதி ஊர்வலம் புறப்பட்டது. பெசன்ட் நகரிலுள்ள மின் மயத்தில் உடல் வீரவணக்க முழக்கங்களுடன் எரி யூட்டப்பட்டது. முன்னதாக, ராஜா அண்ணாமலை புரத்திலுள்ள அவரது இல்ல வாயிலில் தந்தை பெரியார் திராவிடர் கழகத் தலைவர் ஆனூர் செகதீசன் தலைமையில் இரங்கல் கூட்டம் நடைபெற்றது. திராவிட முன்னேற்றக் கழக நாடாளுமன்ற உறுப்பினர் டி.கே.எஸ்....