Tagged: பெரியார் பெருந்தொண்டர்
ஈரோடு வடக்கு மாவட்டம் கோபி நகர திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைவரும், நமது கழகத் தோழர் மணிமொழி தந்தையும், நம் கழகத் தோழர் நிவாஸ் மாமனாருமான தோழர் நாகப்பன் கடந்த 12.01.2017 அன்று உடல்நலக் குறைவுக் காரணமாக இயற்கை எய்தினார். அவரின் இறுதி நிகழ்வு உறவினர்களின் பெரும் ஒத்துழைப்போடு எந்தவிதமான சடங்குகள் இல்லாமல் கழக மகளிர் முன்நின்று உடல் அடக்கம் நிகழ்வினை செய்தனர். வீட்டில் இருந்து உடல் அடக்கம் செய்யும் சுடுகாடு வரைக்கும் பெண்களே சுமந்து சென்று உடல் அடக்கம் செய்யப்பட்டது. உடல் அடக்கத்திற்கு பின் கருப்பு, கருமாதி உள்ளிட்ட எந்த நிகழ்வும் நடைபெறாது என்று அறிவிக்கப்பட்டது. தோழரின் இல்லத்தில் இரங்கல் கூட்டம் நடைபெற்றது. இரங்கல் கூட்டத்தில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, மாநில அமைப்பு செயலாளர் இரத்தினசாமி, மாநில வெளியீட்டு செயலாளர் இராம. இளங்கோவன், தமிழ்நாடு அறிவியல் மன்ற பொறுப்பாளர் ஆசிரியர் சிவகாமி, தபெதிக ஈரோடு மாவட்ட தலைவர் குணசேகரன்,...
‘சமத்துவ சமூகம் அமைப்பதற்கு பெரியாரியல் ஒன்றே தீர்வு’ என வாழ்ந்து காட்டியவர் பட்டுக்கோட்டை வளவன் என்கிற சதாசிவம் என்று படத்திறப்பில் தூத்துக்குடி பால்பிரபாகரன் குறிப்பிட்டார். பெரியார் பெருந்தொண்டர் பட்டுக்கோட்டை வளவன் என்கிற சதாசிவம் அய்யா அவர்களின் படதிறப்பு நிகழ்ச்சி பேராவூரணி ‘மெய்ச்சுடர்’ இதழ் அலுவலகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு திருக்குறள் பேரவை தலைவர் தங்கவேலனார் தலைமை வகித்து உரையாற்றினார். திராவிடர் விடுதலைக்கழக தஞ்சை மாவட்ட அமைப்பாளர் சித.திருவேங்கடம், ‘மெய்ச்சுடர்’ இதழ் ஆசிரியர் வெங்கடேசன், இசிஐ ஆயர் ஜேம்°, தமிழக மக்கள் புரட்சிக்கழக பொதுச் செயலாளர் ஆறு. நீலகண்டன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பெரியார் பெருந்தொண்டர் சதாசிவம், படத்தினை திராவிடர் விடுதலைக்கழக பரப்புரை செயலாளர் தூத்துக்குடி பால் பிரபாகரன் திறந்து வைத்து நினைவஞ்சலி உரையாற்றினார். அவர் தனது உரையில், “பட்டுக்கோட்டை வளவன் அய்யா அவர்கள் திருக்குறள் மீது ஆழ்ந்த பற்றுதல் கொண்டவராகத்தான் இருந்தார். அந்த திருக்குறள் போதித்த சமத்துவ சமூகம் அமைவதற்கு பெரியாரியல் ஒன்றே...