பெரியாரின் விடுதலைப் பெண்ணியம்
தாராளப் பெண்ணியம் சமதர்மப் பெண்ணியம். தீவிரப் பெண்ணியம் என்னும் வகைகளையெல்லாம் மீறிப் பெரியாரியப் பெண்ணியம் அமைந்துள்ளது. மகளிர் பற்றிய பெரியாரின் கருத்ததுக்களும் இலட்சியங்களும் சீர்திருத்தக் கருத்துக்கள், கொள்கைகள்என்னும்அளவில்குறுக்கிநிறுத்திவிட முடியாதவை. உரிமை கேட்டுப் போராடும் பெண்களே திகைக்கக்கூடிய சிந்தனைதான் பெரியாருடையது. அதாவது பெண்ணியத்திலும் பெரியார் அழிவு வேலைக்காரரே! பெண்ணைத் திருத்துவதன்று –மாறாகப் பெண்ணை மாற்றவது பெண்களைப் புதுமையாக்குவதுதான்பெரியாரின்இலட்சியம். சம்பிரதாயப் பெண்ணை (அடிமைப் பெண்) அழித்து உரிமைப் பெண்ணை வளர்த்து புது உலக விடுதலைப் பெண்ணை உருவாக்குவதே பெரியாரின் முயற்சி. பெண்ணே! உன்னை மூடி இருக்கும் திரையை நீக்கு! உன்னைத் தடுத்து நிறுத்தும் தடைச் சுவரினை உடைத்து எறி! உன்னைப் பூட்டியிருக்கும் விலங்கினை நொறுக்கித் தூள் தூளாக்கு! உன் மூளையில் படிந்திருக்கும் பாசியை வழித்தெறி! என் நெஞ்சத்தில் கால மெல்லாம் ஏற்றி வைக்கப்பட்டு உறைந்து போய் கிடக்கின்ற உணர்வுகளையெல்லாம் பொசுக்கு! உன்னைச் சுற்றி ஆயிரமாயிரம் ஆண்டுகளாக இருப்பன அனைத்தையும் சுக்கு நூறாக்கு! அழி! அனைத்தையும்...