இளைஞர்களே, ‘சுயஜாதி’ மறுப்பாளர்களாகி ஜாதி சங்கங்களை புறக்கணிப்போம் பெண் போராளிகள் அறைகூவல்
“இளைஞர்களே; ஜாதி சங்கங்களைப் புறக்கணியுங்கள்; சுய ஜாதி எதிர்ப் பாளர்களாக மாறுங்கள்; ஜாதி ஒழிப்புக் களம் நோக்கி வாருங்கள்; நமது தலைமுறையிலேயே ஜாதி அமைப்பை முடித்து வைப்போம்!” என்று பெண் போராளிகள் அறைகூவல் விடுத்தார்கள். சென்னையில் திராவிடர் விடுதலைக் கழகம், ஜாதி ஒழிப்புக் களம் நோக்கி பெண் போராளிகள் அறைகூவல் விடுக்கும் பொது மேடை ஒன்றை உருவாக்கித் தந்தது. பெரம்பூர் பெரவள்ளூர் சதுக்கத்தில் அக்டோபர் 7 ஆம் தேதி நடந்த எழுச்சி நிகழ்வில் பல்வேறு இயக்கங்களைச் சார்ந்த தோழர்கள், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சார்ந்த கழகத் தோழர்கள் பெருமளவில் பங்கேற்றனர். நெடிய வீதி முழுதும் மக்கள் தலைகளாகவே காட்சி அளித்தது. 6 மணி யளவில் மக்கள் மன்றத்தின் பறை இசை; புரட்சிகரப் பாடல்களுடன் நிகழ்ச்சிகள் தொடங்கின. நேரம் செல்ல செல்ல கூட்டம் அதிகரித்தது. கூடுதல் இருக்கைகள் போடப்பட்டுக் கொண்டே இருந்தன. இருக்கைகளுக்குப் பின்னாலும் வீதியின் ஓரங்களிலும் அடர்த்தியாக இளைஞர்களும் பொது மக்களும்...