அக் 7 சென்னையில் பெண் போராளிகள் ஒரே மேடையில் போர் முழக்கம்!
தோழர்களே தலைநகர் நோக்கி திரளுவீர்! ஜாதி ஒழிப்புக்களம் – தமிழ்நாட்டில் சூடேறி வருகிறது. இளம் பெண் தோழர்கள் பெண்ணுரிமையோடு ஜாதி ஒழிப்பையும் இணைத்து களமிறங்கியிருப்பது மகத்தான திருப்பம். தமிழ்நாட்டின் ஜாதி ஒழிப்பு, பெண்ணுரிமை மதவெறி எதிர்ப்பு, சமூகநீதிப் போராட்டக் களம், இளைஞர்களிடம் வந்து சேர்ந்து விட்டது.அவர்களால்தான் அதை சாதித்துக் காட்டவும் முடியும். தமிழ் நாட்டில் ஜாதி ஒழிப்புக்கு எதிர்நீச்சல் போட்டு களம் இறங்கியிருக்கும் பெண் போராளிகளை ஒரே மேடையில் பங்கேற்கவிருக்கும் நிகழ்வினை திராவிடர் விடுதலைக் கழகம் ஏற்பாடு செய்திருக்கிறது – இது காலத்தின் தேவை! அக். 7ஆம் தேதி மாலை சென்னை பெரம்பூர் பேருந்து நிலையம் அருகே நிகழவிருக்கும் இந்த சங்கமம், ஜாதி ஒழிப்பு பெண்ணுரிமைக்கான போராட்டக் களத்துக்கு அறைகூவல் விடுக்கும் ஒரு திருப்பு முனையான நிகழ்வு. ‘ஜாதியற்றவளின் குரல்’ நூலாசிரியர் ‘மஞ்சள்’ நாடகத்துக்கு கூர்மையான உரையாடல்களைத் தீட்டியவருமான – – போராளி ஜெயராணி ‘கக்கூஸ்’ ஆவணப் படத்தை உருவாக்கி, மலம்...